×
Saravana Stores

பெரம்பலூர் மாவட்டத்தில் 56 பள்ளிவாசல்களில் ரம்ஜான் சிறப்பு தொழுகை

பெரம்பலூர், ஏப்.11: பெரம்பலூர் மாவட்டத்தில் ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே சிறப்புத்தொழுகை நடைபெறும் 301ஆண்டு பழமை வாய்ந்த வாலி கண்டபுரம் சமாஸ்கான் பள்ளிவாசல் மற்றும் மாவட்ட அளவில் 56 பள்ளி வாசல்களில் ரம்ஜான் சிறப்புத் தொழுகை நடக்கிறது.

இஸ்லாமியர்களின் முக்கி யப் பண்டிகையான புனித ரம்ஜான் பண்டிகை இன்று (11ம் தேதி) உலகமெங்கி லும் கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி பெரம்ப லூர் மாவட்டத்தில் புனித ரம்ஜான் பண்டிகைக்காக அனைத்து பள்ளிவாசல்களும் சிறப்பு தொழுகைக்கு தயார் நிலையில் உள்ளன.குறிப்பாக பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை தாலுக்கா, வாலிகண்டபுரம் கிராமத்தில், வி.ஆர்.எஸ். ஏஸ்.புரம் செல்லும் வழி யில் உள்ள, இந்திய தொல் லியல்துறை கட்டுப்பாட்டி லுள்ள, 1723ல் கட்டப் பட்டு நடப்பாண்டு 300ஆண்டுகள் நிறைவடைந்துள்ள பழமையான சமாஸ்கான் பள்ளி வாசலில் ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே சிறப்பு தொழுகை நடத்தப்படும். ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு ஒருநாள் மட் டுமே சிறப்புத்தொழுகை நடத்தப்படும் இந்த சமாஸ்கான் பள்ளிவாசலில் இன்று காலை 8.30 மணி க்கு சிறப்புத் தொழுகை நடத்தப் படுகிறது.

இதேபோல் பெரம்பலூர் மாவட்டத்தின் மிகப்பெரிய பள்ளிவாசலான வி.களத் தூர் ஜாமிஆ பள்ளி வாசல், லப்பைக்குடிகாடு பேரூரா ட்சியிலுள்ள கிழக்கு மஹ ல்லம், மேற்கு மஹல்லம் பள்ளி வாசல்கள், அரும்பாவூரில் உள்ள ஜும்மா பள்ளி வாசல், வாலிகண்டபுரத் தில் உள்ள ஆசார் மக்பூரா பள்ளிவாசல், விசுவக்குடி அத்தக்வா பள்ளிவாசல், மாவட்டத் தலைநகர் பெரம்பலூரில் உள்ள டவுன் பள்ளிவாசல், மதரஸா பள்ளி வாசல், நூர் பள்ளி வாசல், மக்கா பள்ளிவாசல்,மதீனா பள்ளி வாசல், துறைமங்கலம் பள்ளிவாசல், ஆலம்பாடி சாலை பள்ளி வாசல் மற்றும் தொண்டமாந்துறை,பெரியவடகரை, குரும்பலூர், தேவையூர், தைக்கால், டி.களத்தூர் கை.களத்தூர்,சத்திரமனை, பூலாம்பாடி, ஈச்சம்பட்டி உள்ளிட்ட 56 பள்ளி வாசல்க ளிலும் ரம்ஜான் பண்டிகை யையொட்டி சிறப்புத் தொழுகைகள் நடத்தப்படுகிறது.

பெரம்பலூர் நகரில் மட்டும் அனைத்துப் பள்ளி வாசல்களும் ஒருங்கிணைந்து மதரஸா சாலையிலுள்ள மௌலானா மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் சிறப்பு தொழுகை நடத்துகின்ற னர். அதே போல் உழவர் சந்தை அருகே இஸ்லாயிய பெண்கள் ஒன்றுகூறி தொழுகை நடத்து கின்றனர்.

The post பெரம்பலூர் மாவட்டத்தில் 56 பள்ளிவாசல்களில் ரம்ஜான் சிறப்பு தொழுகை appeared first on Dinakaran.

Tags : RAMJAN ,SCHOOL GATES ,PERAMBALUR DISTRICT ,PERAMBALUR, AP.11 ,WALI KANPUR SAMASKAN SCHOOL GATE ,Islamic Muqi Yab festival ,Ramzan ,Perambalur ,
× RELATED நிலமற்ற ஆதிதிராவிடர், பழங்குடியினர்...