கம்பம், ஏப். 11: கம்பத்தில் ரமலான் பண்டிகையை முன்னிட்டு நேற்று நடைபெற்ற சிறப்பு தொழுகையில் திரளான முஸ்லிம்கள் பங்கேற்றனர். இஸ்லாமியர்களின் புனித பண்டிகையான ரமலான், இன்று (ஏப். 11) நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இதற்கிடையில் நேற்று வளைகுடா நாடுகளான சவுதி அரேபியா, துபாய், குவைத் உள்ளிட்ட பெரும்பாலான நாடுகளில் ரமலான் பண்டிகை நேற்று கொண்டாடப்பட்டது.
இதனையடுத்து கம்பத்தில் நேற்று ஜாக் அமைப்பினர் மற்றும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் ரமலான் திருநாள் சிறப்பு தொழுகை நடைபெற்றது. ஜாக் அமைப்பின் சார்பாக நடைபெற்ற தொழுகைக்கு மாவட்ட தலைவர் யாசர் அரபாத் தலைமை வகித்தார். கிளை தலைவர் அப்பாஸ் முன்னிலை வகித்தார். பள்ளிவாசல் இமாம் வாசிம் அக்ரம் சிறப்பு உரை நிகழ்தினார்.
இதில் நூற்றுக்கணக்கான ஆண்களும், பெண்களும் கலந்து கொண்டனர். தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பாக கம்பம்மெட்டு காலனி திடலில் சிறப்பு தொழுகை நடைபெற்றது. இத்தொழுகையில் பஷீர் அகமது சிறப்புரை வழங்கினார். திரளான ஆண்கள் மற்றும் பெண்கள் பங்கேற்றனர். தொழுகை முடிந்ததும் ஒருவருக்கொருவர் இனிப்புகளை வழங்கி தங்கள் மகிழ்ச்சி மற்றும் ரமலான் வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர்.
The post கம்பத்தில் ரமலான் சிறப்பு தொழுகை: திரளான முஸ்லிம்கள் பங்கேற்பு appeared first on Dinakaran.