- கோயில் பூட்டுதல் விழா
- Singambunari
- அம்மன் கோயில் பாங்குனி விழா
- சிங்கம்புனரி நாதர்
- நந்தவனா
- திருப்பத்தூர் வீதி
- தின மலர்
சிங்கம்புணரி, ஏப். 11: சிங்கம்புணரி நாடார் பேட்டையில் உள்ள பத்திரகாளி அம்மன் கோயில் பங்குனி திருவிழா முன்னிட்டு நேற்று பூத்தட்டு விழா நடைபெற்றது. திருப்பத்தூர் சாலையில் உள்ள நந்தவனத்தில் இருந்து நூற்றுக்கணக்கான பெண்கள் பூத்தக்கட்டுகளில் சுமந்து பெரிய கடைவீதி வழியாக அம்மன் கோயிலை அடைந்தனர். அங்கு பத்திரகாளி அம்மன், கருப்பசாமி உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு மலர் அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு தீபாராதனைகள் காண்பிக்கப்பட்டது. வண்ண மலர் அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு காட்சியளித்தார். தொடர்ந்து இரவு 10 மணிக்கு அம்மனுக்கு காப்பு கட்டும் நிகழ்ச்சி நடந்தது. அதனை தொடர்ந்து பக்தர்கள் காப்பு கட்டி விரதத்தை தொடங்கினர். வரும் 16ம் தேதி பால்குடம், அக்னிச்சட்டி, முளைப்பாரி உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெறும். ஏற்பாடுகளை நாடார் உறவின் முறையினர் செய்திருந்தனர்.
The post கோயில் பூத்தட்டு திருவிழா appeared first on Dinakaran.