×
Saravana Stores

அனுமதியின்றி மஞ்சுவிரட்டு; 5 பேர் மீது வழக்கு

திருப்புத்தூர், ஏப். 11: திருப்புத்தூர் அருகே ப. கருங்குளம் பரநாச்சி அம்மன் கோயில் பங்குனித் திருவிழாவை முன்னிட்டு நேற்று காலை பல்வேறு ஊர்களில் இருந்து சுமார் 300க்கும் மேற்பட்ட மஞ்சுவிரட்டு காளைகள் கொண்டுவரப்பட்டது. அப்பகுதியில் உள்ள கண்மாய் பகுதியில் ஆங்காங்கே கட்டுமாடுகளாக அவிழ்த்து விடப்பட்டு மஞ்சுவிரட்டு நடத்தப்பட்டது.

இதில் ஏராளமான இளைஞர்கள் கலந்து கொண்டு மாடுகளை ஆர்வத்துடன் பிடித்தனர். இதில் 5 பேருக்கு லேசான காயம் ஏற்பட்டது. ப.கருங்குளம் கிராம நிர்வாக அலுவலர் ராஜலட்சுமி புகாரில், கருங்குளத்தைச் சேர்ந்த நாச்சியப்பன் (54), சிங்காரம் (70), பாண்டியன் (46), நாச்சியப்பன் (79) சந்திரன் (30) ஆகியோர் மீது அரசு அனுமதியின்றி மஞ்சுவிரட்டு நடத்தியதாக கூறி திருக்கோஷ்டியூர் காவல் நிலைய எஸ்.ஐ., சத்தியமூர்த்தி வழக்கு பதிந்து விசாரிக்கிறார்.

The post அனுமதியின்றி மஞ்சுவிரட்டு; 5 பேர் மீது வழக்கு appeared first on Dinakaran.

Tags : Tiruputhur ,Karunkulam Paranachi Amman Koil Pangunith festival ,Kanmai ,
× RELATED கண்மாயில் மூழ்கி மாணவன் பலி