×

ரூ.6,986 கோடி தேர்தல் பத்திர நிதி ஊழல்; மோடி, அமித்ஷா மீது மதுரை போலீசில் புகார்

மதுரை: மதுரையை சேர்ந்த வழக்கறிஞர் வாஞ்சிநாதன், மதுரை அண்ணா நகர் காவல் நிலையத்தில் அளித்த புகார் மனு: ஒன்றிய ஆட்சி அதிகாரத்தில் உள்ள பாஜ மட்டும் 12.4.2019 முதல் 15.2.2024 வரை ₹6,986.5 கோடி தேர்தல் பத்திர நிதியாக பெற்றுள்ளது. அமலாக்கத்துறை, வருமானவரித்துறை, சிபிஐ வழக்குகளை எதிர் கொள்ளும் 41 நிறுவனங்கள் பாஜவுக்கு ₹2,471 கோடி நிதியினை அளித்துள்ளன. ₹1,698 கோடி தேர்தல் பத்திர நிதி அமலாக்கத்துறை, சிபிஐ மற்றும் வருமானவரித்துறையினரின் ரெய்டுகளுக்குப் பின் பாஜவிற்கு வழங்கப்பட்டுள்ளது.

பாஜவின் முறைகேடான தேர்தல் நிதிக்காக ஒன்றிய அரசின் நிறுவனங்களை பிரதமர் மோடி, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் பயன்படுத்தி அதிகார துஷ்பிரயோகம் செய்துள்ளனர். இவர்களின் செயலானது இந்திய தண்டனைச் சட்ட பிரிவுகள் கூட்டுச்சதி (120(பி)) மற்றும் மிரட்டி பணம் பறித்தல் ஆகியவற்றின் கீழ் தண்டனைக்குரிய குற்றங்கள் மட்டுமின்றி நாட்டின் மீது நிகழ்த்தப்பட்ட பொருளாதார பயங்கரவாதமாகும். எனவே, இவர்கள் மீது வழக்கு பதிந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

The post ரூ.6,986 கோடி தேர்தல் பத்திர நிதி ஊழல்; மோடி, அமித்ஷா மீது மதுரை போலீசில் புகார் appeared first on Dinakaran.

Tags : Modi ,Amit Shah ,Madurai ,Vanchinathan ,Madurai Anna Nagar Police Station ,BJP ,Enforcement Department ,Madurai Police ,Dinakaran ,
× RELATED அமித்ஷா சென்ற ஹெலிகாப்டர் நிலைதடுமாறியதால் பரபரப்பு..!!