×

பகுஜன் வேட்பாளர் இறந்ததால் நிறுத்தம்; மபியில் ஒரு தொகுதி தேர்தல்: மே 7ம் தேதிக்கு தள்ளிவைப்பு

பெதுல்: மக்களவை தொகுதிகளில் ஏப்.19ம் தேதி முதல் ஜூன் 1ம் தேதி வரை 7 கட்டமாக தேர்தல் நடக்கிறது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் தேர்தல் ஆணையம் செய்துள்ளது. இந்தநிலையில் மத்தியபிரதேச மாநிலம் பெதுல் மக்களவை தொகுதி பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர் அசோக் பாலவி நேற்று திடீரென மாரடைப்பால் மரணம் அடைந்தார். இதையடுத்து அந்த தொகுதியில் தேர்தல் பணிகளை தேர்தல் ஆணையம் நிறுத்தி விட்டது.

அங்கு இரண்டாம் கட்டமாக ஏப்.26ம் தேதி தேர்தல் நடைபெற இருந்தது. வேட்பாளர் இறந்து விட்டதால் அங்கு தேர்தல் பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டன. இந்தநிலையில் அங்கு மே 7ம் தேதி தேர்தல் நடைபெறும் என்று தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது. பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் புதிய வேட்பாளர் நிறுத்துவதற்கு வசதியாக இந்த அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் பெதுல் தொகுதியில் இரண்டாம் கட்ட தேர்தலுக்கு பதில் மே 7ம் தேதி 3ம் கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் 543 தொகுதிக்கும் தேர்தல் நடைபெறுவது தேர்தல் ஆணையத்தால் உறுதி செய்யப்பட்டுள்ளது.

The post பகுஜன் வேட்பாளர் இறந்ததால் நிறுத்தம்; மபியில் ஒரு தொகுதி தேர்தல்: மே 7ம் தேதிக்கு தள்ளிவைப்பு appeared first on Dinakaran.

Tags : Bagajan ,Mabi ,Lok Sabha ,Election Commission ,Madhya Pradesh ,Bagajan Samaj Party ,Dinakaran ,
× RELATED ஸ்டிராங் ரூம் சிசிடிவி கேமராக்களில் கோளாறால் பரபரப்பு!