×
Saravana Stores

ரமலான் பண்டிகையை முன்னிட்டு அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து

சென்னை: ரமலான் பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
எடப்பாடி பழனிசாமி (அதிமுக பொதுச்செயலாளர்): ‘‘அனைவரிடத்திலும் அன்பு காட்டுங்கள்; பிறருக்கு உதவி புரியுங்கள்; சகோதரத்துவத்துடன் வாழ்ந்திடுங்கள்’’ என்ற நபிகள் நாயகம் அவர்களின் போதனைகளை மனதில் கொண்டு வாழ்ந்திட உறுதியேற்போம் .

ராமதாஸ் (பாமக நிறுவனர்): உலக மக்களிடம் அன்பு, நல்லிணக்கம், சகிப்புத் தன்மை, சகோதரத்துவம், ஈகை உள்ளிட்ட நற்குணங்கள் பெருகவும், அமைதி, வளம், முன்னேற்றம், ஒற்றுமை, மகிழ்ச்சி ஆகியவை தழைக்கவும் உழைக்க இப்புனித நாளில் உறுதியேற்போம்.

வைகோ (மதிமுக பொதுச்செயலாளர்): நபிகள் நாயகம் காட்டிய நெறிகளை ஏற்று வாழும் இஸ்லாமிய பெருமக்கள் கொண்டாடுகிற ரமலான் திருநாளில் சமய நல்லிணக்கமும், சகோதரத்துவமும் நிலைநாட்டப்படவும், சமூக ஒற்றுமை தழைக்கவும் பாடுபடுவோம்.

செல்வப்பெருந்தகை (தமிழக காங்கிரஸ் தலைவர்): இஸ்லாமியப் பெருமக்கள் நபிகள் நாயகம் (ஸல்) வாழ்ந்து காட்டிய சமாதானம், சமத்துவம், சகோதரத்துவம், சகவாழ்வு முறைகளை பின்பற்றி என்றும்போல் இன்புற்று வாழ பிரார்த்திக்கிறேன்.

ஜி.கே.வாசன் (த.மா.கா. தலைவர்): ரமலான் பண்டிகையில் சமத்துவமும், சகோதரத்துவமும் பரவுகிறது. மேலும், இஸ்லாமியப் பெருங்குடி மக்களின் வாழ்வு மேம்பட தமாகா என்றும் துணை நிற்கும்.

டிடிவி தினரகன் (அமமுக பொதுச்செயலாளர்): ரமலான் பெருநாளை கொண்டாடும் இஸ்லாமியப் பெருமக்களின் எண்ணங்கள் அனைத்தும் நிறைவேறட்டும்.

ஓ.பன்னீர்செல்வம் (முன்னாள் முதல்வர்): நபிகள் நாயகம் போதனையை கருத்தில் கொண்டு, அனைவரும் தங்கள் கடமைகளைச் செவ்வனே மேற்கொண்டு வாழ வேண்டும்.

பிரேமலதா (தேமுதிக பொதுச்செயலாளர்): இந்த இனிய நாளில், அன்பு ஓங்கிட, அறம் தழைத்திட, சமாதானம் நிலவிட, சகோதரத்துவம் வளர்ந்திட வேண்டுமென தெரிவித்துக்கொள்கிறேன்.

ஜவாஹிருல்லா (மனித நேய மக்கள் கட்சி தலைவர்): புனித ரமலான் மாதத்தில் நம்மிடம் காணப்பட்ட ஈகைக் குணம் ஆண்டு முழுவதும் தொடரவும், வெறுப்புணர்வு நெருப்பை அணைக்க அனைவரையும் அரவணைப்போம் என உறுதியேற்போம்.

நெல்லை முபாரக் (எஸ்.டி.பி.ஐ மாநில தலைவர்): மத நல்லிணக்கத்தையும், சகோதரத்துவ ஒற்றுமையையும் காத்திடுவோம்.

இதுபோல எர்ணாவூர் நாராயணன் (சமத்துவ மக்கள் கழக தலைவர்) இந்திய ஹஜ் அசோசியேஷன் தலைவர் பிரசிடெண்ட் அபூபக்கர், தமிழ்நாடு முஸ்லிம் லீக் தலைவர் முஸ்தா உள்ளிட்டோர் ரம்ஜான் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

The post ரமலான் பண்டிகையை முன்னிட்டு அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து appeared first on Dinakaran.

Tags : Ramadan festival ,Chennai ,Tamil Nadu ,Ramadan ,EDAPPADI PALANISAMI ,
× RELATED தமிழ்நாடு முழுவதும் ரேஷன் கடைகள்...