×

பழநி கணக்கன்பட்டியில் விபத்தில் இறந்தவரின் குடும்பத்துக்கு ரூ.20 லட்சம் காப்பீட்டு தொகை

பழநி, ஏப். 11: பழநி அருகே ராமபுரத்தை சேர்ந்தவர் பஞ்சவர்ணம் (54) கூலித்தொழிலாளி. இவர் கணக்கன்பட்டி பாரத ஸ்டேட் வங்கி கிளையில் சேமிப்பு கணக்கு வைத்திருந்தார். மேலும் வங்கியில் விபத்து காப்பீடு செய்திருந்தார். இதற்காக ஆண்டுதோறும் ரூ.1000 செலுத்தி வந்தார். இந்நிலையில் கடந்த டிசம்பர் மாதம் நடந்த சாலை விபத்தில் பஞ்சவர்ணம் உயிரிழந்தார். இதையடுத்து பாரத ஸ்டேட் வங்கி வங்கியின் ஜெனரல் இன்சூரன்ஸ் நிறுவனம் சார்பில் பஞ்சவாணத்தின் குடும்பத்திற்கு ரூ.20 லட்சம் காப்பீட்டு தொகை வழங்க முடிவானது. அதன்படி, வங்கியில் நடந்த நிகழ்ச்சியில் பாரத ஸ்டேட் வங்கியின் திண்டுக்கல் மண்டல மேலாளர் திவ்யா தேஜா, பஞ்சவர்ணத்தின் மகன் கண்ணணிடம் ரூ.20 லட்சத்திற்கான காசோலையை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் வங்கி முதன்மை மேலாளர் சுஜாதா பிரியதர்ஷினி, கிளை மேலாளர் சிந்துஜா, இன்சூரன்ஸ் அதிகாரி மணிகண்டன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

The post பழநி கணக்கன்பட்டியில் விபத்தில் இறந்தவரின் குடும்பத்துக்கு ரூ.20 லட்சம் காப்பீட்டு தொகை appeared first on Dinakaran.

Tags : Palani ,Panchavarnam ,Ramapuram ,State Bank of India ,Palani Kapanpadti ,
× RELATED பன்றிகள் அப்புறப்படுத்த நகராட்சி நிர்வாகம் முடிவு