×

மது விற்றவர் கைது

பாப்பிரெட்டிப்பட்டி, ஏப்.11: பாப்பிரெட்டிப்பட்டி செங்கல்பட்டு தெருவைச் சேர்ந்தவர் வீட்டில் மது பாட்டில்களை பதுக்கி வைத்து, விற்பனை செய்து வருவதாக, பாப்பிரெட்டிப்பட்டி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு செய்தனர். அப்போது, அப்பகுதியைச் சேர்ந்த மணி(52) என்பவரது வீட்டில் சோதனை செய்தபோது, அவரது வீட்டில் 50மது பாட்டில்கள் பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்தது.இதையடுத்து, மது பாட்டில்களை பறிமுதல் செய்து, மணியை போலீசார் கைது செய்தனர்.

The post மது விற்றவர் கைது appeared first on Dinakaran.

Tags : Papriprettipatti ,Chengalpattu street ,Mani ,Dinakaran ,
× RELATED அரசு கல்லூரியில் முதலாமாண்டு மாணவர் சேர்க்கை கலந்தாய்வு