×
Saravana Stores

ஏக்நாத் தலைமையில் செயல்படுவது சிவசேனா கட்சியா? ‘சீன’சேனா கட்சியா? மோடியின் விமர்சனத்திற்கு உத்தவ் பதிலடி

மும்பை: ஏக்நாத் ஷிண்டே தலைமையில் செயல்படும் கட்சி சிவசேனா கட்சியா? ‘சீன’சேனா கட்சியா? என்ற கேள்வி எழுந்துள்ளது. மோடியின் விமர்சனத்திற்கு உத்தவ் தாக்கரே பதிலடி கொடுத்துள்ளார். மகாராஷ்டிராவில் உத்தவ் தாக்கரே தலைமையில் செயல்பட்டு வந்த சிவசேனா கட்சியில் இருந்து வெளியேறிய ஏக்நாத் ஷிண்டே, பெரும்பான்மை எம்பி, எம்எல்ஏக்களை வளைத்து போட்டார். மாநிலத்தின் முதல்வரான ஏக்நாத் ஷிண்டே தலைமையில் செயல்படும் சிவசேனா கட்சி தான் உண்மையான சிவசேனா கட்சி என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது.

பின்னர் உத்தவ் தாக்கரே தனது தலைமையில் ஒரு சிவசேனா கட்சியை உருவாக்கினார். இதற்கிடையே உத்தவ் தலைமையிலான சிவசேனாவை ‘போலியான சிவசேனா’ என்று பிரதமர் மோடி விமர்சித்து இருந்தார். இதற்கு பதிலடி கொடுத்த உத்தவ் தாக்கரே, ஏக்நாத் தலைமையிலான சிவசேனாவை ‘சீன சேனா’ என்று கிண்டலாக கூறினார். இந்நிலையில் நாக்பூரில் செய்தியாளர்களிடம் பேசிய ஏக்நாத் ஷிண்டே, ‘சிவசேனா கட்சி யாருடையது? எங்களது சிவசேனா கட்சியானது, பால் தாக்கரேவால் உருவாக்கப்பட்டது.

அவரது சித்தாந்தத்தை பின்பற்றுவர்கள் தான் இங்கு உள்ளனர். அவரது சித்தாந்தத்தைப் பின்பற்றாதவர்கள், எங்களை விமர்சிக்கும் முன் சிந்திக்க வேண்டும். கொரோனா காலத்தில் வீட்டில் அமர்ந்து கொண்டு பணத்தை எண்ணியவர்கள், பிரதமர் மோடியை விமர்சிக்க உரிமை இல்லை. லோக்சபா தேர்தலில் எங்களது கூட்டணிக்கு (பாஜக – சிவசேனா – தேசியவாத காங்கிரஸ்) நிபந்தனையற்ற ஆதரவளித்த எம்என்எஸ் கட்சி தலைவர் ராஜ் தாக்கரேவுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்’ என்றார்.

The post ஏக்நாத் தலைமையில் செயல்படுவது சிவசேனா கட்சியா? ‘சீன’சேனா கட்சியா? மோடியின் விமர்சனத்திற்கு உத்தவ் பதிலடி appeared first on Dinakaran.

Tags : Sivasena Party ,Eknath ,China ,Uddhav ,Modi ,Mumbai ,Eknath Shinde ,Uddhav Thackeray ,Maharashtra ,Dinakaran ,
× RELATED மும்பை, விதர்பாவில் 4 தொகுதிகளை...