×
Saravana Stores

நாளை ரம்ஜான் பண்டிகை; மணப்பாறை சந்தையில் ரூ.75 லட்சம் ஆடு சேல்ஸ்

மணப்பாறை: திருச்சி மாவட்டம் மணப்பாறையில் ஒவ்வொரு வாரமும் புதன்கிழமை ஆட்டுச்சந்தை நடைபெறும். இங்கு ஆடுகளை வாங்க, மணப்பாறை மட்டுமின்றி திருச்சி, திண்டுக்கல், புதுக்கோட்டை, கரூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து வியாபாரிகள் வருவர். ஒவ்வொரு வாரமும் கூட்டம் அதிகமாக இருந்தாலும் திருவிழா காலங்களில் மணப்பாறை ஆட்டுச்சந்தை களைகட்டும். அதன்படி மணப்பாறையில் ஆட்டுச்சந்தை இன்று காலை 5 மணிக்கு துவங்கியது. ரம்ஜான் பண்டிகை நாளை கொண்டாடப்படும் நிலையில் அதிகளவில் விவசாயிகள் விற்பனைக்காக ஆடுகளை கொண்டு வந்தனர். இதேபோல் ஆடுகளை வாங்குவதற்காக வியாபாரிகள் அதிகளவில் வந்தனர்.

இதனால் காலை 6 மணிக்கெல்லாம் சந்தை களைகட்டியது. விவசாயிகள் கொண்டு வந்த ஆடுகளை விலை பேசி வியாபாரிகள் வாங்கி சென்றனர். காலை 10 மணி வரை சந்தை நடந்தது. இதில் ரூ.75 லட்சத்துக்கும் மேல் ஆடுகள் விற்பனையானது.இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், விவசாயிகளின் முக்கிய வாழ்வாதரத்தின் ஒன்றாக இருப்பது கால்நடை வளர்ப்பு தொழில். ஆடுகள் வளர்ப்பு எங்களது பொருளாதாரத்துக்கு உதவி புரிந்து வருகிறது. ரம்ஜான் பண்டிகை நாளை கொண்டாடப்படும் நிலையில் ஆடுகள் அதிகளவில் விற்பனையானது. 1,000க்கும் மேற்பட்ட ஆடுகள் விற்பணைக்காக கொண்டு வரப்பட்டிருந்தது என்றனர்.

The post நாளை ரம்ஜான் பண்டிகை; மணப்பாறை சந்தையில் ரூ.75 லட்சம் ஆடு சேல்ஸ் appeared first on Dinakaran.

Tags : Ramadan ,Manaparai market ,Manparai ,Trichy ,Dindigul ,Pudukottai ,Karur ,Dinakaran ,
× RELATED குட்கா முறைகேடு வழக்கில் முன்னாள்...