×

கொட்டாம்பட்டி அருகே சமத்துவ மீன்பிடி திருவிழா

மேலூர்: கொட்டாம்பட்டி அருகே நடந்த சமத்துவ மீன்பிடி திருவிழாவில் மக்கள் போட்டிபோட்டு மீன்களை பிடித்து சென்றனர். மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டி அருகே நாகப்பன் செவல்பட்டியில் உள்ளது அதிகாரி கண்மாய். இந்த கண்மாய் மூலம் ஏராளமான விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. விவசாய பணிகள் முடிவடைந்த நிலையில், கண்மாயில் ஏற்கனவே வாங்கி விடப்பட்ட மீன்குஞ்சுகள் பெரிதாக வளர்ந்திருந்தின. இதையடுத்து, கண்மாயில் சமத்துவ மீன்பிடி திருவிழா நடத்த முடிவு செய்யப்பட்டது.

இதன்படி, இன்று காலை ஊர் பெரியவர்கள் கண்மாய் கரையில் நின்று வெள்ளை வீசி மீன்பிடிக்க அனுமதி வழங்கினர். கொட்டாம்பட்டி, சொக்கலிங்கபுரம், கருங்காலக்குடி, தும்மைப்பட்டி உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் வலை உள்ளிட்ட மீன்பிடி உபகரணங்களை கொண்டு கட்லா, கெண்டை, விரால் போன்ற மீன்களை போட்டிபோட்டு பிடித்து சென்றனர்.

The post கொட்டாம்பட்டி அருகே சமத்துவ மீன்பிடி திருவிழா appeared first on Dinakaran.

Tags : Samatwa Fishing Festival ,Kottampatti ,Samathva Fishing Festival ,Adhikari Kanmai ,Nagappan Sewalpatti ,Madurai District ,Kanmai.… ,Samattva Fishing Festival ,Dinakaran ,
× RELATED மேலூர் அருகே சமத்துவ மீன்பிடி திருவிழா: ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்பு