×

நெருங்கும் தேர்தல்; மக்களை கவர முந்தும் வேட்பாளர்கள்..புதுப்புது உத்திகளை கையாண்டு வாக்குகேட்கும் சுவாரஸ்யம்..!!

திருவண்ணாமலை: தேர்தலுக்கு இன்னும் 8 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில், வாக்காளர்களை கவர புது புது யுக்திகளை கையாண்டு வேட்பாளர்களும் அவர்களை ஆதரித்து அரசியல் கட்சி தலைவர்களும் வாக்கு சேகரித்து வருகின்றனர். ஆரணி தொகுதி திமுக வேட்பாளர் தரணிவேந்தனை ஆதரித்து திண்டிவனம் அடுத்த மயிலம் சுற்றுவட்டாரத்தில் அமைச்சர் செஞ்சி மஸ்தான் வாக்கு சேகரித்தார். வெண்கண்டூரில் பரப்புரை மேற்கொண்டுவிட்டு திரும்பியபோது அங்கிருந்த ஐஸ் வியாபாரியை அழைத்து பொதுமக்களுக்கு குச்சி ஐஸ் வாங்கி கொடுத்தார். அப்போது அங்கிருந்த செய்தியாளர்களை பார்த்து மக்களை ஏமாற்றி நம்ப வைத்த மோடிக்கு குச்சி ஐஸ் மட்டும் தான் கிடைக்கும் என்றார்.

* திருவண்ணாமலை தொகுதி அதிமுக வேட்பாளர் எம்.கலியபெருமாள், திருவண்ணாமலை நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். முன்னதாக தேரடி வீதியில் உள்ள பூ மார்க்கெட் சென்ற அவருக்கு ஆளுயர ரோஜா மாலை அணிவித்து பூ வியாபாரிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

* திண்டுக்கல் அடுத்த வேடப்பட்டியில், திண்டுக்கல் தொகுதி பாமக வேட்பாளர் திலகபாமா பரப்புரை வேனில் சென்றபடியே வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். ஆள் நடமாட்டமே இல்லாத சாலையில் மக்களை பார்த்து பேசுவது போல திலகபாமாவுக்கு மாம்பழ சின்னத்தில் வாக்களிக்குமாறு பாஜக மாவட்ட தலைவர் தனபால் வாக்கு சேகரித்தார். தொடர்ந்து 10க்கும் மேற்பட்ட கட்சி தொண்டர்கள் மத்தியில் பாமக வேட்பாளர் திலகபாமா பரப்புரை மேற்கொண்டார்.

* விருதுநகர் அருகே பாவாலி கிராமத்தில் பாஜக வேட்பாளர் ராதிகாவின் பரப்புரையின் போது கூட்டத்தை அதிகப்படுத்தி காட்டுவதற்காக பள்ளி மாணவர்களின் கைகளில் பாஜக கொடியை கொடுத்து சாலையோரம் நிறுத்திவைக்கப்பட்டிருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பள்ளி மாணவர்களை பரப்புரை கூட்டத்தில் நிறுத்தி வைத்ததோடு ஆபத்தான முறையில் இடிந்து விழும் நிலையில் உள்ள கட்டிடம் ஒன்றின் மேற்பகுதியில் மாணவர்களை அமரவைக்கப்பட்டதாகவும் கண்டித்து வருகின்றனர்.

The post நெருங்கும் தேர்தல்; மக்களை கவர முந்தும் வேட்பாளர்கள்..புதுப்புது உத்திகளை கையாண்டு வாக்குகேட்கும் சுவாரஸ்யம்..!! appeared first on Dinakaran.

Tags : Tiruvannamalai ,Dindivanam ,Arani ,Dimuka ,Dinakaran ,
× RELATED திருவண்ணாமலை, ஆரணி தொகுதிக்கான வாக்கு...