×

ஆமாம், நான் எல்லோருக்கும் மேலானவன்தான்: பாடல்கள் காப்புரிமை வழக்கில் இசையமைப்பாளர் இளையராஜா தரப்பு பதில்

சென்னை: ஆமாம், நான் எல்லோருக்கும் மேலானவன்தான் என்று பாடல்கள் காப்புரிமை வழக்கில் இசையமைப்பாளர் இளையராஜா தரப்பு பதில் அளித்துள்ளது. இளையராஜாவின் 4,500 பாடல்களை பயன்படுத்த எக்கோ, அகி ஆகிய இசை நிறுவனங்களுக்கு விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து நிறுவனங்கள் சார்பில் தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கில் வாதம் நடைபெற்று வருகிறது.

காப்புரிமை இல்லாமல் தனது பாடல்களைப் பயன்படுத்தியதாக எக்கோ என்ற நிறுவனம் மீது காவல் ஆணையர் அலுவலகத்தில் இளையராஜா புகார் அளித்தார். இந்தப் புகாரின் மீது காவல்துறையின் மத்திய குற்றப்பிரிவு சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இதை எதிர்த்து, எக்கோ நிறுவனம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி வி.முரளீதரன் இந்தப் பிரச்சினை ஒரு சிவில் பிரச்சினை என்பதால், கிரிமினல் புகார் அளிக்க முடியாது என்று கூறி, இளையராஜா அளித்த புகாரின் அடிப்படையில் தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டார்.

நான் 2010-ம் ஆண்டு எக்கோ நிறுவனத்தின் மீதும், அதன் உரிமையாளர் மீதும் போலீஸில் புகார் அளித்தேன். சட்டத்துக்குப் புறம்பாக என் பாடல்களை விற்பனை செய்வதாக அளித்த புகாரின் அடிப்படையில், போலீஸார் சிடிக்களைப் பறிமுதல் செய்து, வழக்குப்பதிவு செய்தனர். அந்தக் குற்றவியல் நடவடிக்கை வழக்கை ரத்து செய்யக்கோரி அவர்கள் தொடுத்த வழக்கின் தீர்ப்பே நேற்று வெளிவந்தது.

அதில் நீதியரசர், எக்கோ நிறுவனத்தின் மீதான குற்றவியல் நடவடிக்கையை மட்டுமே ரத்து செய்துள்ளார். அதில் எனது காப்புரிமை செல்லாது என அறிவிக்கவில்லை. இந்த வழக்குக்கும், எனது பாடல்களின் உரிமை மீதான வழக்குக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று கூறியுள்ளார்.

படத்தின் காப்புரிமை என்பது தயாரிப்பாளரிடம் உள்ளது. இசையமைப்பாளர் குறிப்பிட்ட படத்திற்கு ஊதியம் பெற்ற உடன் அனைத்து உரிமைகளையும் இழந்து விடுகிறார். காப்புரிமை சட்டத்தின் கீழ் பாடல்களின் உரிமையாளராக இளையராஜா வருவாரா என்று நிறுவனங்கள் தரப்பு வாதம் தெரிவித்துள்ளது. இளையராஜா ஒரு இசைஞானி என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால், 1970, 80, 90களில் இருந்த ஈர்ப்பு அவரது பாடல்களுக்கு இப்போது இல்லை. இளையராஜா தன்னை எல்லாருக்கும் மேலானவர் என நினைக்கிறார் என்றும் நிறுவனங்கள் தரப்பு வாதம் கூறியுள்ளது

இதற்கு பதிலளித்த இளையராஜா தரப்பு வழக்கறிஞர், “ஆமாம், நான் எல்லோருக்கும் மேலானவன்தான் என்றும் வீம்புக்காக இதனை சொல்வதாக நினைக்க வேண்டாம்” என வாதம் செய்து வந்தது. இந்த வழக்கின் விசாரணை வரும் 16ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.

The post ஆமாம், நான் எல்லோருக்கும் மேலானவன்தான்: பாடல்கள் காப்புரிமை வழக்கில் இசையமைப்பாளர் இளையராஜா தரப்பு பதில் appeared first on Dinakaran.

Tags : Ilayaraja ,CHENNAI ,Eko ,Aki ,Dinakaran ,
× RELATED வரிகள், பாடகர் குரல் சேர்ந்துதான்...