×

தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பின் மாநில துணைத்தலைவர் தாமஸ் வீட்டில் வருமான வரித்துறை சோதனை..!!

நீலகிரி: நீலகிரி மாவட்டம் கூடலூரில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். நீலகிரி மாவட்டம் கூடலூரில் காங்கிரஸ் கட்சியின் நிர்வாகியும், வணிகர் சங்க பேரமைப்பின் மாநில சங்க தலைவருமான தாமஸ் என்பவர் வீட்டில் சோதனை நடைபெற்று வருகிறது. சுமார் 5 மணி நேரத்திற்கும் மேலாக 2 வாகனத்தில் வந்த 8 அதிகாரிகள் தொடர்ந்து சோதனை நடத்தி வருகின்றனர். தாமஸ் கட்சி பணிகள் மட்டுமின்றி, வீடு கட்டுமான பொருட்கள் விற்பனை செய்யும் நிறுவனத்தை நடத்தி வருகிறார். முன்னாள் ஊராட்சி மன்ற தலைவராகவும் உள்ளார்.

அதுமட்டுமின்றி தாமஸ் பெயரில் தேயிலை தோட்டங்கள் இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. கூடலூரில் இவர் பிரபலமான தொழில் அதிபராகவும் இருந்துள்ளார். இந்நிலையில், தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பின் மாநில துணைத்தலைவர் தாமஸ் வீட்டில் சோதனை நடைபெற்று வருகிறது. 2 பைகளை அதிகாரிகள் காரில் ஏற்றியதாக கூறப்படுகிறது. இருப்பினும் ஆய்வில் கைப்பற்றப்பட்ட பொருட்கள் குறித்து தற்போது வரை தகவல் வெளியாகவில்லை.

The post தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பின் மாநில துணைத்தலைவர் தாமஸ் வீட்டில் வருமான வரித்துறை சோதனை..!! appeared first on Dinakaran.

Tags : Income Tax department ,Tamil Nadu Federation of Merchants Association ,State Vice President ,Thomas ,Nilgiris ,Kudalur ,Nilgiris district ,Congress party ,Federation of Merchants' Unions ,Kudalur, Nilgiris district ,Tamil Nadu Chamber of Commerce State ,Vice-President ,Thomas' ,Dinakaran ,
× RELATED சென்னையில் இருந்து திருச்சிக்கு...