சென்னை : மறைந்த முன்னாள் அமைச்சர் ஆர்.எம்.வீரப்பனின் உடலுக்கு அரசு மரியாதை வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. நுங்கம்பாக்கம் மின் மயானத்தில் அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு நடத்தப்பட்டு ஆர்.எம்.வீரப்பன் உடல் தகனம் செய்யப்படுகிறது. தமிழ்நாடு அரசின் கோரிக்கையை ஏற்று ஆர்.எம்.வீரப்பன் உடலுக்கு அரசு மரியாதை வழங்க தேர்தல் ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளது.
இதுகுறித்து வெளியான அறிக்கையில்; “இந்திய தேர்தல் ஆணையம், அரசின் கோரிக்கையை பரிசீலித்து, 1977 முதல் 1996 வரை ஐந்து முறை கேபினட் அமைச்சராக பதவி வகித்து மறைந்த ஆர்.எம்.வீரப்பனுக்கு அரசு மரியாதை வழங்க அனுமதி அளித்துள்ளது.
மூன்று முறை சட்டமன்ற உறுப்பினராகவும், இரண்டு முறை சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்தவர், 09.04.2024 அன்று காலமானார் மற்றும் அவரது இறுதிச் சடங்குகள் 10/04/2024(இன்று) மாலை 4 மணிக்கு சென்னை நுங்கம்பாக்கம் தகன மைதானத்தில் நடைபெறும்” என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் உடல்நலக்குறைவால் நேற்று காலமான அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.எம்.வீரப்பனின் இறுதி ஊர்வலம் தொடங்கியது. அவரது இல்லத்தில் இருந்து நுங்கம்பாக்கத்தில் உள்ள மயானத்திற்கு கொண்டு செல்லப்பட்டு இன்னும் சிறுது நேரத்தில் அவரது உடல் அடக்கம் செய்யப்பட உள்ளது.
The post மறைந்த முன்னாள் அமைச்சர் ஆர்.எம்.வீரப்பனின் உடலுக்கு அரசு மரியாதை வழங்க உத்தரவு appeared first on Dinakaran.