×

2025ம் ஆண்டுக்கான மெகா ஏலம்; 8 வீரர்களை தக்க வைக்க அனுமதியா? ஐபிஎல் உரிமையாளர்களுடன் 16ம் தேதி பிசிசிஐ ஆலோசனை

மும்பை: இந்தியாவில் பிசிசிஐ சார்பில் ஆண்டு தோறும் ஐபிஎல் டி.20 தொடர் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் அடுத்த ஆண்டு ஐபிஎல் மெகா ஏலம் நடைபெற உள்ளது. இது தொடர்பாக ஐபிஎல் அணி உரிமையாளர்கள் கூட்டத்திற்கு பிசிசிஐ அழைப்பு விடுத்துள்ளது. இந்த கூட்டம் வரும் 16ம் தேதி நடைபெற உள்ளது. இதில் 10அணிகளின் உரிமையாளர்கள் மற்றும் பிசிசிஐ தலைவர், செயலாளர் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொள்கின்றனர்.

அடுaத்த சீசனில் ஒவ்வொரு அணியும் அதிகபட்சமாக 8 வீரர்களை தக்க வைத்துக்கொள்வது குறித்து முக்கிய முடிவு எடுக்கப்படும் என தெரிகிறது. கடந்த 2022ம் ஆண்டு நடந்த மெகா ஏலத்தில் அதிகபட்சமாக 4 வீரர்களை தக்க வைத்துக்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டது. தற்போது இதன் எண்ணிக்கை அதிகரிக்கப்படலாம். மேலும் ஐபிஎல்லின் மொத்த ஏலத்தொகை ரூ.100 கோடியில் இருந்து அதிகரிக்கப்படலாம் எனவும் கூறப்படுகிறது.

The post 2025ம் ஆண்டுக்கான மெகா ஏலம்; 8 வீரர்களை தக்க வைக்க அனுமதியா? ஐபிஎல் உரிமையாளர்களுடன் 16ம் தேதி பிசிசிஐ ஆலோசனை appeared first on Dinakaran.

Tags : BCCI ,IPL ,Mumbai ,IPL T20 series ,India ,Dinakaran ,
× RELATED கள்ளச்சந்தையில் ஐபிஎல் டிக்கெட்...