×

தூத்துக்குடியில் கனிமொழியை ஆதரித்து பிரசாரம் ஒன்றியத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும் பெட்ரோல், டீசல், காஸ் விலை குறைப்பு

*அமைச்சர் கீதாஜீவன் பேச்சு

தூத்துக்குடி : இந்தியா கூட்டணி வெற்றி பெற்று ஒன்றியத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும் பெட்ரோல், டீசல், காஸ் விலை குறைக்கப்படும் என்று தூத்துக்குடியில் கனிமொழியை ஆதரித்து பிரசாரம் செய்த அமைச்சர் கீதாஜீவன் பேசினார். தூத்துக்குடி மக்களவை தொகுதியில் இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிடும் திமுக வேட்பாளர் கனிமொழியை ஆதரித்து பொன்சுப்பையா நகர், கோவில்பிள்ளைநகர், அலங்காரத்தட்டு, லூர்தம்மாள்புரம், எஸ்.எஸ்.மாணிக்கபுரம், திரேஸ்புரம், திரவியபுரம், மட்டக்கடை, குரூஸ்புரம் உள்ளிட்ட பகுதிகளில் வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன் பிரசாரம் மேற்கொண்டார்.

அப்போது அவர் பேசுகையில், உங்களுக்காக குரல் கொடுப்பதற்கு மீண்டும் கனிமொழி எம்பி இந்த தொகுதியில் போட்டியிடுகிறார். கடந்த 3 ஆண்டு கால திமுக ஆட்சியில் செய்த சாதனைகள் ஏராளம். குறிப்பாக கடந்த அதிமுக ஆட்சியில் இரவு 10 மணிக்கு எல்லாம் கடைகளை அடைக்க வேண்டும் என்று வியாபாரிகளை துன்புறுத்தும் அரசாக இருந்தது. அந்த காலக்கட்டத்தில் சாத்தான்குளத்தில் தந்தை, மகன் இருவரையும் காவல்துறையினர் சித்ரவதை செய்து கொன்றுவிட்டனர். ஆனால் இப்போது திமுக ஆட்சியில் வியாபாரிகள் வாழ்வாதாரம் உயர்வதற்கு, சுதந்திரமாக கடையை திறந்து அடைப்பதற்கு வழிவகை செய்யப்பட்டு உள்ளது.

மகளிர் உரிமைத்தொகை ரூ.ஆயிரம், விடுபட்டவர்களுக்கு ஜூன் மாதம் முதல் கிடைப்பதற்கு வழிவகை செய்யப்படும். இந்த துறையின் அமைச்சராக இருக்க கூடிய உதயநிதி ஸ்டாலின், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவுப்படி செய்து கொடுப்பார். இந்த பகுதியில் தேவையான கட்டமைப்பு பணிகளை குறிப்பாக சாலை, கால்வாய், பூங்கா, புதிய மின்விளக்கு, ஆரம்ப சுகாதார நிலையம் என அனைத்து தரப்பினருக்கும் உதவிகள் செய்துள்ளோம்.

அந்த உரிமையோடு வாக்கு கேட்க வந்துள்ளோம். மகளிருக்கு ரூ.ஆயிரம் உரிமைத்தொகை வழங்குவதை போல், இந்தியாவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு காங்கிரஸ் தலைமையிலான அரசு அமையும்போது, வறுமை கோட்டிற்கு கீழுள்ள பெண்களுக்கு ஆண்டுக்கு 1 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அது நிச்சயம் நடக்கும். இந்தியா கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைத்தால் பெட்ரோல் ரூ.75க்கும், டீசல் ரூ.65க்கும், சமையல் எரிவாயு ரூ.500க்கும் வழங்கப்படும். டோல்கேட் நீக்கப்படும் என காங்கிரஸ் தெரிவித்துள்ளது.

அதேபோல் தமிழகத்திற்கும் பல நன்மைகள் கிடைக்கும். எனவே நடைபெறவுள்ள மக்களவை தேர்தலில் தூத்துக்குடி தொகுதியில் கனிமொழி எம்.பிக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற செய்ய வேண்டும். இவ்வாறு பேசினார்.பிரசாரத்தில் மாநில காங். துணை தலைவர் சண்முகம், மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன், மாநகர் மாவட்ட காங். தலைவர் முரளிதரன், முன்னாள் எம்எல்ஏ சுடலையாண்டி, மக்கள் நீதிமய்யம் மாவட்ட செயலாளர் ஜவகர், மதிமுக மாநகர செயலாளர் முருகபூபதி, இந்திய கம்யூ. மாநகர செயலாளர் ஞானசேகர், திமுக மாநில மீனவரணி துணை செயலாளர் புளோரன்ஸ், துணை மேயர் ஜெனிட்டா,

மாவட்ட அவைத்தலைவர் செல்வராஜ், துணை செயலாளர் ராஜ்மோகன் செல்வின், மாவட்ட மீனவரணி அமைப்பாளர் அந்தோணிஸ்டாலின், மண்டல தலைவர் நிர்மல்ராஜ், மாவட்ட அணி துணை அமைப்பாளர்கள் அந்தோணிகண்ணன், பிரபு, நிக்கோலாஸ்மணி, மாநகர அணி அமைப்பாளர்கள் ஜீவன்ஜேக்கப், அருண்சுந்தர், முருகஇசக்கி, டேனியல், துணை அமைப்பாளர்கள் பால்ராஜ், மகேஸ்வரன்சிங், வினோத், பெல்லா, ஆர்தர் மச்சாது, தொழிற்சங்க செயலாளர் மரியதாஸ், பகுதி செயலாளர் ஜெயக்குமார், மாவட்ட பிரதிநிதி சக்திவேல், கவுன்சிலர்கள் ஜெயசீலி, மெட்டில்டா, பவாணி, வைதேகி, சுதா, எடிண்டா, ரிக்டா, வட்ட செயலாளர்கள் தினகரன், ரவிச்சந்திரன், கருப்பசாமி, டென்சிங், முத்துராஜா, லியோஜான்சன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

The post தூத்துக்குடியில் கனிமொழியை ஆதரித்து பிரசாரம் ஒன்றியத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும் பெட்ரோல், டீசல், காஸ் விலை குறைப்பு appeared first on Dinakaran.

Tags : Tuticorin ,Kanimozhi ,Minister ,Geethajeevan ,Thoothukudi ,India ,Lok Sabha Constituency ,Prasararam Union ,
× RELATED தேர்தல் பிரச்சாரத்தின் போது திமுக...