×

தஞ்சாவூர் நாடாளுமன்ற தேர்தலில் 100% வாக்குப்பதிவு வலியுறுத்தி ராட்சத பலூன் பறக்க விட்டு விழிப்புணர்வு

* மாவட்ட தேர்தல் துவக்கி வைத்தார்

தஞ்சாவூர் : தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் ஏப்ரல் 19ம் தேதி 100% வாக்களிப்போம் என்ற வாசகங்கள் கொண்ட பெரிய பலூன் பறக்க விடும் பணியை மாவட்ட நிர்வாகம் சார்பில் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்டகலெக்டர் தலைவர் தீபக் ஜேக்கப் நேற்று துவக்கி வைத்தார்.தஞ்சாவூர் நாடாளுமன்றத் தேர்தலில் 100% வாக்குப்பதிவினை வலியுறுத்தி பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது.

தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் ஏப்ரல் 19ம் தேதி 100% வாக்களிப்போம் என்ற வாசகங்கள் கொண்ட பெரிய பலூன் பறக்க விடும் பணியை மாவட்ட நிர்வாகம் சார்பில் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்டகலெக்டர் தலைவர் தீபக் ஜேக்கப் நேற்று துவக்கி வைத்தார். வரும் ஏப்ரல் 19ம் தேதி தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரே கட்டமாக நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது.

இந்த நிலையில் தஞ்சாவூர் தொகுதியில் 100% பொதுமக்கள் வாக்களிக்க வேண்டும் என பல்வேறு விழிப்புணர்வு நிகழ்வை நடத்தி வருகின்றனர். அந்த வகையில் நேற்று மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பெரிய பலூன் பறக்கவிடும் நிகழ்வு நடைபெற்றது. ஏற்கனவே தஞ்சாவூர் மாநகராட்சி அலுவலகத்தில் இதேபோல் பெரிய பலூன் பறக்கவிடப்பட்டுள்ளது. மேலும் தஞ்சை மாநகரில் பல்வேறு வகையான விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. மாணவர்கள் பேரணி, கர்ப்பிணி பெண்களுக்கு குடை வழங்கும் நிகழ்வு, விழிப்புணர்வு மெகந்தி போட்டி, வீடு வீடாக தேர்தல் அழைப்பிதழ் வழங்கும் நிகழ்வு என பல்வேறு முயற்சிகளை மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநகராட்சி சார்பில் எடுக்கப்பட்டு வருகிறது.

தன் ஒரு நிகழ்வாக பெரிய பலூன் பறக்கும் விடும் பணி நேற்று நடைபெற்றது.நிகழ்வின்போது துணை ஆட்சியர் (பயிற்சி) விஷ்ணு பிரியா, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் மதியழகன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.தஞ்சாவூர் குந்தவை நாச்சியார் அரசு மகளிர் கலை கல்லூரியில் தஞ்சாவூர் பாராளுமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை மையம் முன்னேற்பாடு பணிகளை தேர்தல் பொதுப் பார்வையாளர் கிக்கேட்டோ சேம, மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

தஞ்சாவூர் பாராளுமன்றத் தேர்தலுக்குட்பட்ட வாக்கு எண்ணிக்கை தொகுதிகளுக்கான மையத்திற்கான தடுப்புகள், மின்விளக்குகள், சிசிடிவி கேமராக்கள் பொருத்தும் பணிகள் நடைபெற்று வருவதையும், செய்தியாளர் மையம், தேர்தல் கட்டுப்பாட்டு அறை அமைவிடம் ஆகியவற்றில் முன்னேற்பாடு பணிகளை நேரில் பார்வையிட்டார். இந்த ஆய்வின்போது மாவட்ட வருவாய் அலுவலர் தியாகராஜன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் மதியழகன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

The post தஞ்சாவூர் நாடாளுமன்ற தேர்தலில் 100% வாக்குப்பதிவு வலியுறுத்தி ராட்சத பலூன் பறக்க விட்டு விழிப்புணர்வு appeared first on Dinakaran.

Tags : Thanjavur Parliamentary Elections ,Thanjavur ,
× RELATED தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையத்தில் 100...