×

ஓர் அங்குலம் கூட ஆக்கிரமிக்க முடியாது என சீனாவுக்கு நற்சான்றிதழா?: மோடி, அமித்ஷா இடையே போட்டா போட்டி என காங்கிரஸ் விமர்சனம்!

டெல்லி: இந்தியாவின் 2000 சதுர கிலோ மீட்டர் நிலத்தை ஆக்கிரமித்துள்ள சீனாவால் ஓர் அங்குலம் நிலத்தை கூட ஆக்கிரமிக்க முடியாது என மோடியும், அமித்ஷாவும் போட்டிபோட்டு நற்சான்று வழங்குவதாக காங்கிரஸ் குற்றச்சாட்டியுள்ளது. அசாமில் பாஜக தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பேசிய ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பிரதமர் மோடி ஆட்சியில் ஒரு அங்குல நிலத்தை கூட சீனாவால் ஆக்கிரமிக்க முடியாது என கூறியிருந்தார். மேலும், 1962ல் இந்தியா – சீன போரின் போது நேரு செய்த துரோகத்தை அசாம் மற்றும் அருணாச்சல பிரதேச மாநில மக்கள் என்றும் மறக்க மாட்டார்கள் எனவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

அமித்ஷாவின் இந்த பேச்சு குறித்து தமது எக்ஸ் பக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ள காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெயராம் ரமேஷ்; நான்கு ஆண்டுகளுக்கு முன்பு கொள்வான் பள்ளத்தாக்கு சம்பவத்திற்கு பிறகு சீனா ஆக்கிரமிக்கவில்லை என்று மோடி கூறிய பொய்யை தான் சீனா உலகம் முழுவதும் தனக்கு சாதகமாக பயன்படுத்தி வருகிறது என விமர்சித்துள்ளார். எல்லையில் இந்தியாவின் 2,000 கிலோ மீட்டர் நிலம் மட்டுமின்றி லடாக்கில் உள்ள 65 கண்காணிப்பு முனைகளில் 26 இடங்களில் சீனா தன்வசப்படுத்தி கொண்டுள்ளதாகவும், அருணாச்சல பிரதேசத்தின் உள்பகுதியிலேயே சுமார் 60 கிலோ மீட்டர் தூரத்திற்கு சீனா பல கிராமங்களை உருவாக்கி உள்ளதாகவும் ஆளும் பாஜக எம்.பி. நாடாளுமன்றத்தில் பேசியதை ஜெயராம் ரமேஷ் சுட்டிக்காட்டியுள்ளார். மேலும், வரும் ஜூன் 4ம் தேதி முதல் சீனா ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளுக்கு தகுந்த பதிலடி கொடுக்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

 

 

The post ஓர் அங்குலம் கூட ஆக்கிரமிக்க முடியாது என சீனாவுக்கு நற்சான்றிதழா?: மோடி, அமித்ஷா இடையே போட்டா போட்டி என காங்கிரஸ் விமர்சனம்! appeared first on Dinakaran.

Tags : China ,Congress ,Bota ,Modi ,Amitsha ,Delhi ,India ,BJP ,Assam, EU ,
× RELATED சொல்லிட்டாங்க…