- ஈச்சங்கோட்டை வேளாண் கல்லூரி
- குருங்குளம் ஊராட்சி
- தஞ்சாவூர்
- கிராமப்புற மதிப்பீடு
- குருங்குளம் ஊராட்சி தோளகிரிபட்டி
தஞ்சாவூர், ஏப்.10: குருங்குளம் ஊராட்சி தோழகிரிப்பட்டி கிராமத்தில் ஊரக வேளாண் பணியில் ஈடுபட்டுள்ள ஈச்சங்கோட்டை வேளாண் கல்லூரி மாணவர்கள் மக்களை சந்தித்து”பங்கேற்பு கிராமப்புற மதிப்பீடு” நிகழ்வினை நடத்தினர். இதன் மூலம் கிராமத்தின் மக்கள் தொகை, விவசாய நில அளவு, பயிரிடப்படும் முக்கிய பயிர்கள், பயிர் சுழற்சி முறைகள்,கிராமத்தில் உள்ள வளங்கள் மற்றும் விவசாயிகளின் குறைகள் ஆகிய தகவல்களைத் திரட்டினர்.
இந்நிகழ்விற்கு பஞ்சாயத்து தலைவர் கோகிலா சிவக்குமார் தலைமை வகித்தார். மேலும்கிராமத்தின் முக்கிய தலைவர்களும் ஊர் மக்களும் பங்கேற்றுகிராமத்தின் வளங்களை வெண்படம் மூலம் வரைந்து தங்களின் கிராமத்தின் நிறைகுறைகளை தெரிவித்தனர். நிகழ்ச்சியின் மூலம் கிராமம் பற்றிய பிற தகவல்களை வேளாண் கல்லூரி மாணவர்களும், கிராமத்தை மேம்படுத்த என்ன செய்ய வேண்டும் என்பதையும் விவசாயிகளும் தெரிந்து கொண்டனர்.
The post குருங்குளம் ஊராட்சியில் ஈச்சங்கோட்டை வேளாண் கல்லூரி மாணவர்கள் மக்களுடன் சந்திப்பு appeared first on Dinakaran.