×

ஜெயங்கொண்டம் அருகே வாகன சோதனை ஆவணமின்றி டூவீலரில் எடுத்து வந்த ரூ. 96 ஆயிரம் பறிமுதல்

 

ஜெயங்கொண்டம் ஏப்.10: சிதம்பரம் நாடாளுமன்ற தேர்தல் சம்மந்தமாக ஜெயங்கொண்டம் சட்டமன்றத்திற்கு உட்பட்ட விருத்தாசலம் பைபாஸ் ரோட்டில் கீழ குடியிருப்பு தனியார் திருமண மண்டபம் அருகே தேர்தல் நிலையான கண்காணிப்பு குழு வினய் உதவி பொறியாளர் வசந்தன் தலைமையில் காவலர் செந்தமிழ்ச்செல்வன் டிரைவர் அம்பேத்கர் உள்ளிட்ட குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது வழியே வந்த இருசக்கர வாகனத்தை நிறுத்தி சோதனைகள் செய்யும் போது இருசக்கர வாகனத்தில் உரிய ஆவணம் இன்றி கடலூர் மாவட்டம் பென்னாடத்தில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் பணி செய்த கடலூர் மாவட்டம் பெண்ணாடம் வரலாறு தெருவை சேர்ந்த மகேஸ்வரன் மகன் தங்கதுரை (27), பாண்டி மகன் கார்த்திக் ஆகியோர் உரிய ஆவணம் இன்றி எடுத்து வந்த 96 ஆயிரத்து 550 ஐ கைப்பற்றி உடையார்பாளையம் ஆர்டிஓ ஷீஜா வசம் ஒப்படைக்கப்பட்டது.

The post ஜெயங்கொண்டம் அருகே வாகன சோதனை ஆவணமின்றி டூவீலரில் எடுத்து வந்த ரூ. 96 ஆயிரம் பறிமுதல் appeared first on Dinakaran.

Tags : Jayangondam ,Election Standing Monitoring Committee ,Vinay ,Assistant Engineer ,Vasandan ,Voorthachalam Bypass Road ,Jayangkondam Assembly ,Chidambaram Parliamentary ,Kavalar ,Senthamichselvan ,
× RELATED ஜெயங்கொண்டம் அருகே பெண் குளிக்கும்...