×

கோவை மாவட்டத்தில் நாளை ரம்ஜான் தொழுகை

 

கோவை, ஏப். 10: கோவை மாவட்ட ஐக்கிய ஜமாஅத் சார்பில், ரமலான் பெருநாளை முடிவு செய்வதற்கான பிறை பார்க்கும் கூட்டம் ஆர்.எஸ்.புரம் குர்ரத்துல் ஐய்ன் பள்ளிவாசலில் நேற்று மாலை நடந்தது. மாவட்ட ஐக்கிய ஜமாஅத் தலைவர் ஏ.ஆர்.பஷீர்அகமது தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் ஏ.அப்துல்ஜப்பார், குர்ரத்துல் ஐய்ன் சுன்னத் ஜமாத் பள்ளி தலைவர் சி.கிதர்முகமது ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், தமிழகத்தில் எங்கும் பிறை தென்படாத காரணத்தால், இன்று (புதன்கிழமை) 30 நோன்பாக கடைபிடித்து, நாளை (வியாழன்) அன்று ரமலான் பெருநாள் கொண்டாடப்படும் என தீர்மானிக்கப்பட்டது.

கூட்டத்தில், ஆர்.எஸ்.புரம் ஜமாத் முத்தவல்லி ஷாஜகான், செயலாளர் ஏ.ஆர்.நூர்தீன், பள்ளிவாசல் தலைவர்கள் அப்துல்ஜப்பார் (குனியமுத்தூர்), மன்சூர்அலி (சிங்காநல்லூர்), அப்துல்ரகுமான் (லாலி ரோடு), சவுகத்அலி (பூமார்க்கெட்), இப்ராகீம் (செல்வபுரம் கல்லாமேடு), பாரூக் (ஆத்துப்பாலம்), அப்துல் ரகுமான் (கவுண்டம்பாளையம் அசோக் நகர்), சிக்கந்தர் (கீரைக்கார வீதி), குலாம் தாரிக் (ரத்தினபுரி) உள்பட பலர் பங்கேற்றனர்.

The post கோவை மாவட்டத்தில் நாளை ரம்ஜான் தொழுகை appeared first on Dinakaran.

Tags : Ramzan prayer ,Coimbatore district ,Coimbatore ,Coimbatore District United Jamaat ,RS Puram Qurratul Ayin mosque ,Ramadan ,District United Jamaat ,President ,A.R.Bashir Ahmed ,Ramzan ,Dinakaran ,
× RELATED சித்திரைச்சாவடி தடுப்பணையில் தண்ணீர் வரத்து அதிகரிப்பு