வேலூர், ஏப்.10: குடியாத்தம் அருகே உள்ள மோர்தானா அணையில் இருந்து பாசனத்திற்கு இன்று முதல் 16 நாட்களுக்கு தண்ணீர் திறந்து விடப்பட உள்ளதாக கலெக்டர் சுப்புலட்சுமி தெரிவித்துள்ளார். இதுகுறித்து கலெக்டர் சுப்புலட்சுமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: குடியாத்தம் தாலுகா மோர்தானா நீர்தேக்கத்தின் இருப்பை கருத்தில் கொண்டு கவுண்டன்ய ஆற்றில் வினாடிக்கு 140 கன அடி வீதம் இடதுபுற கால்வாய் மற்றும் வலதுபுற கால்வாய்களில் தலா 70 கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட உள்ளது. தொடர்ந்து 16 நாட்களுக்கு மொத்தம் 193.54 மில்லியன் கன அடி தண்ணீரை இன்று முதல் திறந்துவிட நீர்வளத்துறையின் சார்பில் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. எனவே அரசாணையின்படி மோர்தனா நீர்தேக்கத்திலிருந்து இன்று காலை 8 மணிக்கு கலெக்டர் சுப்புலட்சுமி இடது மற்றும் வலதுப்புற கால்வாய்களில் பாசனத்திற்காக தண்ணீரை திறந்து வைக்க உள்ளார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
The post மோர்தானா அணையில் இருந்து இன்று நீர் திறப்பு கலெக்டர் தகவல் குடியாத்தம் அருகே உள்ள appeared first on Dinakaran.