×

பட்டுக்கூடு வரத்து சரிவு

தர்மபுரி, ஏப்.10: தர்மபுரி மாவட்ட பட்டுகூடு அங்காடியில் தினமும் 30க்கும் மேற்பட்ட விவசாயிகள் வெண்பட்டுக்கூடுகளை ஏலத்திற்கு கொண்டு வருகின்றனர். பட்டுக்கூடுக்கு நல்ல விலை கிடைப்பதால், தர்மபுரி மாவட்டம் மட்டுமின்றி பிற மாவட்டங்களை சேர்ந்த விவசாயிகளும் பட்டுக்கூடுகளை, தர்மபுரி அங்காடிக்கு கொண்டு வருகின்றனர். யுகாதி பண்டிகையால் நேற்று தர்மபுரியை சேர்ந்த 2 விவசாயிகள் மட்டும் 140 கிலோ பட்டுக்கூடுகளை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். நேற்று தர்மபுரி பட்டுக்கூடு அங்காடியில் வெண் பட்டுக்கூடு அதிகபட்சமாக ₹426க்கும், சரசாரியாக ₹422க்கும், குறைந்தபட்சமாக ₹420க்கும் ஏலம் போனது. மொத்தம் ₹59 ஆயிரத்து 160க்கு பட்டுக்கூடு ஏலம் போனது.

The post பட்டுக்கூடு வரத்து சரிவு appeared first on Dinakaran.

Tags : Dharmapuri ,Dharmapuri district ,
× RELATED நவீன கருவி பொருத்திய 200 ஹெல்மேட் விநியோகம்