×

ஏப்.17, 19, ஜூன் 4 சென்னையில் 3 நாள் டாஸ்மாக் கடை மூடல்

சென்னை: நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு ஏப்.17 முதல் 19ம் தேதி, ஜூன் 4 ஆகிய நாட்களில் சென்னையில் டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என கலெக்டர் ராஷ்மி சித்தார்த் ஜகடே உத்தரவிட்டுள்ளார். இது குறித்து சென்னை கலெக்டர் ராஷ்மி சித்தார்த் ஜகடே வெளியிட்ட அறிக்கை: இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, நடைபெறவுள்ள நாடாளுமன்ற பொதுத்தேர்தலை முன்னிட்டு, ஏப்.17ம் தேதி காலை 10 மணி முதல் 19ம் தேதி (வாக்குப்பதிவு நடைபெறும் நாள்) இரவு 12 மணி வரை மற்றும் ஜூன் 4ம் தேதி (வாக்குகள் எண்ணும் நாள்) ஆகிய தினங்களில் தமிழ்நாடு மதுபான சில்லரை விற்பனை (கடைகள் மற்றும் பார்கள்) விதிகள் 2003, விதி 12 மற்றும் தமிழ்நாடு மதுபானம் (உரிமம் மற்றும் அனுமதி) விதிகள் 1981 விதி 25II (a) ஆகியவைகளின் கீழ், சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் மதுபான சில்லரை விற்பனை கடைகள் மற்றும் அதனைச் சார்ந்த பார்கள், உரிமம் கொண்ட கிளப்புகளைச் சார்ந்த பார்கள், உரிமம் கொண்ட ஓட்டல்களைச் சார்ந்த பார்கள் மற்றும் உரிமம் கொண்ட பார்கள் அனைத்தும் கண்டிப்பாக மதுபானம் விற்பனை செய்யக்கூடாது என இதன்மூலம் அறிவிக்கப்படுகிறது. தவறினால் மதுபானம் விற்பனை விதிகளின்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

The post ஏப்.17, 19, ஜூன் 4 சென்னையில் 3 நாள் டாஸ்மாக் கடை மூடல் appeared first on Dinakaran.

Tags : Tasmac ,Chennai ,Rashmi Siddharth Jagade ,Dinakaran ,
× RELATED மஹாவீர் ஜெயந்தி, மே தினத்தில் டாஸ்மாக் விடுமுறை