×

சேலம் பாஜ தலைவர் வீட்டில் பணம் பதுக்கல்? பறக்கும் படையினரை சோதனை செய்ய விடாமல் எதிர்ப்பு

சேலம் மாநகர் மாவட்ட பாஜ தலைவராக இருப்பவர் சுரேஷ்பாபு (50). இவரது வீட்டில் வாக்களர்களுக்கு வழங்க பணம் பதுக்கி வைத்திருப்பதாக வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, நேற்று மாலை 5.30 மணியளவில் வருமான வரித்துறை அதிகாரிகள் குரங்குசாவடி அப்பார்ட்மென்டில் உள்ள சுரேஷ்பாபு வீட்டில் ஒரு மணி நேரம் சோதனை நடத்திவிட்டு, பணம் எதுவும் இல்லை எனக்கூறி சென்றுவிட்டனர். அதேநேரம் தேர்தல் பறக்கும் படையினருக்கு கிடைத்த தகவல் பேரில் சோதனையிடுவதற்காக சுரேஷ்பாபு வீட்டிற்கு சென்றனர். அதற்கு சுரேஷ்பாபு மற்றும் 20க்கும் மேற்பட்ட பாஜவினர் சோதனையிட எதிர்ப்பு தெரிவித்து உதவி கமிஷனர் நிலவழகன், கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

சேலம் மேற்கு தொகுதி பாமக எம்எல்ஏ அருள் மற்றும் பாமக மாவட்ட தலைவர் கதிர்ராசரத்தினம் ஆகியோர் சுரேஷ்பாபு வீட்டிற்கு வந்து அவர்களும் போலீசுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அங்கு போலீசார் குவிக்கப்பட்டனர். அதிர்ச்சியடைந்த பாஜவினர், வீட்டுக்குள் சோதனை நடத்த விடாமல் வாசலில் பாஜவினர் அமர்ந்து கொண்டனர். அப்போது, போலீசார் வருமான வரித்துறையினரை போல் நாங்கள் சோதனை நடத்தி, வீடியோ படம் எடுத்து விட்டு, ஒன்றுமில்லாவிட்டால் நாங்களும் சென்று விடுவோம் என்றனர். ஆனால், அதற்கு பாஜவினர் ஒப்புக்கொள்ளவில்லை. போலீசார் வீட்டிற்குள் நுழைய முயன்றபோது, பாஜகவினர் போலீசாருக்கு எதிராக, பாரத் மாதாகி ஜே என கோஷம் எழுப்பி தகராறில் ஈடுபட்டனர்.

The post சேலம் பாஜ தலைவர் வீட்டில் பணம் பதுக்கல்? பறக்கும் படையினரை சோதனை செய்ய விடாமல் எதிர்ப்பு appeared first on Dinakaran.

Tags : Salem ,BJP ,Suresh Babu ,Income Tax ,Income Tax Department ,Dinakaran ,
× RELATED சேலம் கிழக்கு மாவட்ட பாஜ தலைவருக்கு...