×

மோடி இனி ஊர் ஊராய் போய்… ரோடு ஷோ பண்ணி தான் பிழைக்கணும்… அண்ணாமலை பல்பு இனி செல்ப் எடுக்காது

1. நாடாளுமன்ற தேர்தலில் பொதுவாக எந்த பிரச்னை எதிரொலிக்கும் என்று நினைக்கிறீர்கள்?
பிரதமர் மோடி படித்தவர்களுக்கு வேலை கொடுப்பேன் என்றார். ஆனால் வேலை கொடுக்காம பக்கோடா வித்து புழைச்சுக்கங்க என்றார். மணிப்பூர் பிரச்னை என்பது தென்இந்திய அளவில் மட்டுமல்லாமல் வட இந்திய மக்களையும் அதிகம் பாதித்துவிட்டது. டெல்லியில் விவசாயிகள் போராட்டத்தை கண்டுகொள்ளாமல் விட்டது, அகில இந்திய அளவில் மோடி எதிர்ப்பலை வீசி வருகிறது. அடுத்ததாக, ரூ.15லட்சம் கொடுப்பேன் என்று சொன்னார், யாருடைய வங்கி கணக்கிலும் அது ஏறவில்லை. இதெல்லாம் இந்த தேர்தலில் கண்டிப்பாக எதிரொலிக்கும்.

2. பிரதமர் மோடி அடிக்கடி தமிழ்நாட்டுக்கு தொடர்ந்து வருகிறார். அதற்கு பலன் கிடைக்கும் என்று நினைக்கிறீர்களா?
ஆமா, கண்டிப்பாக கிடைக்கும். என்ன கிடைக்கும்னா, அங்கங்க போய்.. இப்போ ரோடு ஷோ எல்லாம் பண்றார். இப்ப புதுசா ஆரம்பிச்சிருக்கார். இது எதற்காக என்றால், ஜூன் 4ம்தேதிக்கு பிறகு மொத்தமாக முடிந்து விடும். அதனால மோடி இனி ஊர் ஊராய் போய்…ரோடு ரோடா போய் ஷோ பண்ணி தான் அவர் பிழைக்கணும். அதற்கான ரிகல்சல் இது. அதனால இதற்கு பலன் இருக்கும். அது பின்னால உதவும். ரோடு ஷோவுல பாஜ வேட்பாளர்கள் எல்லாரையும் கூட்டிட்டு போய் நிறுத்தினாங்கன்னா.. எதுக்கு சொல்றேன்னா, தமிழ்நாட்டுல மழை வெள்ளம் வரும் போது நீங்க வந்து பாக்கல, நீங்க இப்ப தெரு தெருவா சுத்தறீங்க.. மக்கள் அந்த அளவுக்கு முட்டாள்கள் கிடையாது.

3. நைட்ல எழுதி காலையில ஒப்பிக்கிறார் என்று அண்ணாமலையை பற்றி சொல்லியிருக்கிறீர்களே?
இனி நம்ம பல்பு எல்லாம் செல்ப் எடுக்காதுன்னு, அவருக்கு தெரிஞ்சு போச்சு.. கீழ விழுந்தாலும் மீசையில மண் ஒட்டாம பேசுவாங்கல்ல, அத மாதிரி வித்தியாசமா பேசுறார். மக்களை வந்து இப்படி ஆக்கிருவேன், அப்படி ஆக்கிருவேன் என்கிறார். நீங்க தான் பண்ணணும் அதத்தான் நீங்க பண்ணவே இல்லையே.. நாட்டில் உள்ள பல லட்சம் ஏழைகள் வாழ்க்கையை உயர்த்தி தருவேன் என்றார்கள். எந்த பக்கம் உயர்த்தினார் என்று இன்னைய வரைக்கும் தெரிய மாட்டேங்குது.. பாவம்..ரோட்டோரம் இருக்கிற மக்கள் அங்கேயே தான் இருக்கிறார்கள். வடமாநிலத்தில் வேலையே இல்லாமல் தமிழ்நாட்டுக்கு படையெடுத்து வர்றாங்க.. இது தான் மக்களை மேம்படுத்துறதா?. ஒரு மேடையில் இருந்து இன்னொரு மேடைக்கு செல்லும் முன்பு, அந்தந்த ஏரியாவில் என்னென்ன பிரச்னை இருக்கிறது என்பதை தெரிந்து கொண்டு வாயில் வடை சுடுவார்.

4. கோவையை நோக்கி ரூ.4ஆயிரம் கோடி போய் கொண்டிருக்கிறது என்று திகிலை கிளப்பியிருக்கீங்களே?
இந்த பக்கம் ரூ.4 கோடியை பிடிக்கும் போதே, பக்கத்து ரயிலில் ரூ.40 கோடி போச்சுன்னா யாருக்கு தெரியும். என்னுடைய டவுட் இது. இது ஒரு பித்தலாட்டமா இருக்குமோ என்ற சந்தேகம் எனக்கு வந்திருக்கிறது. போன டிரெயின் பத்திரமா போய் சேர்ந்திருக்கும். ஏன்னா டிரெயினுக்கும், ஒன்றிய அரசுக்கும் சம்பந்தம் இருக்குதுல்ல. அதனால நான் சொன்னதுல மாற்று கருத்தே கிடையாது.

The post மோடி இனி ஊர் ஊராய் போய்… ரோடு ஷோ பண்ணி தான் பிழைக்கணும்… அண்ணாமலை பல்பு இனி செல்ப் எடுக்காது appeared first on Dinakaran.

Tags : Modi ,Manipur ,South India ,North India ,Annamalai Bulbu ,Dinakaran ,
× RELATED ஓராண்டு கடந்தும் மணிப்பூர் இன்னமும்...