×

ஏப். 26ல் 2ம் கட்டதேர்தல் 88 மக்களவை தொகுதியில் 1,210 வேட்பாளர்கள் போட்டி

புதுடெல்லி: மக்களவை தேர்தல் ஏப்.19ம் தேதி முதல் ஜூன் 1ம் தேதி வரை 7 கட்டமாக நடக்கிறது. முதல்கட்ட தேர்தல் ஏப்.19ம் தேதி நடைபெற உள்ள நிலையில் ஏப்.26ம் தேதி 2ம்கட்ட தேர்தலுக்கான வேட்புமனுதாக்கல் நடந்தன. கேரளாவில் 20 தொகுதி, கர்நாடகாவில் 14 தொகுதி உள்பட 2ம் கட்டமாக 12 மாநிலம் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 88 தொகுதிகளில் 2633 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

கேரளாவில் உள்ள 20 தொகுதிகளில் அதிகபட்சமாக 500 வேட்புமனுக்கள், கர்நாடகாவில் 14 தொகுதிகளில் இருந்து 491 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. மகாராஷ்டிராவின் நான்டெட் தொகுதியில் அதிகபட்சமாக 92 வேட்புமனுக்கள் பெறப்பட்டன. வேட்புமனுக்கள் பரிசீலனைக்குப் பிறகு 1,428 மனுக்கள் இறுதி செய்யப்பட்டன.

பல தொகுதிகளில் வேட்பாளர்கள் விலகியதால் 88 தொகுதிகளில் 1,210 பேர் போட்டியிடுகிறார்கள் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்து உள்ளது. கேரளாவின் வயநாட்டில் ராகுல் காந்தி (காங்கிரஸ்), அன்னி ராஜா (மார்க்சிஸ்ட்) உள்ளிட்டோர். முக்கிய வேட்பாளர்கள். ராஜஸ்தானில் கோட்டா தொகுதியில் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, ஒன்றிய அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் ஜோத்பூரிலும் போட்டியிடுகின்றனர்.

The post ஏப். 26ல் 2ம் கட்டதேர்தல் 88 மக்களவை தொகுதியில் 1,210 வேட்பாளர்கள் போட்டி appeared first on Dinakaran.

Tags : 88 ,Lok ,Sabha ,New Delhi ,Lok Sabha ,Kerala, Karnataka ,Dinakaran ,
× RELATED நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 88...