- ராஜபுத்ரா
- ரூபாலா
- பஜாஜ்
- கர்ணி சேனா
- அகமதாபாத்
- அமைச்சர்
- யூனியன்
- ராஜ்கோட்
- குஜராத்
- ராஜபுத்திரர்கள்
- தின மலர்
அகமதாபாத்: ராஜபுத்திரர்கள் குறித்து அவதூறாக பேசிய அமைச்சர் ரூபாலாவை வேட்பாளர் போட்டியில் இருந்து நீக்க வலியுறுத்தி பாஜ அலுவலகம் முன் போராட சென்ற கர்னி சேனா அமைப்பு தலைவர் கைது செய்யப்பட்டார். குஜராத் மாநிலம் ராஜ்கோட் தொகுதியில் போட்டியிடும் ஒன்றிய அமைச்சர் பர்ஷோத்தம் ரூபாலா அண்மையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசினார். அப்போது முன்பு நாட்டை ஆண்ட மகாராஜாக்கள் வௌிநாட்டு ஆட்சியாளர்கள், ஆங்கிலேயர்களுக்கு அடிபணிந்து நடந்ததாகவும், அவர்களின் பெண்களை திருமணம் செய்து கொண்டதாகவும் பேசியிருந்தது சர்ச்சையை கிளப்பி உள்ளது.
ரூபாலாவின் பேச்சுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள ராஜபுத்திர சமூகத்தினர், ராஜ்கோட் வேட்பாளர் ரூபாலாவை நீக்க வலியுறுத்தி வருகின்றனர். ரூபாலாவை நீக்க வலியுறுத்தி ராஜபுத்திர சமூக பெண் தலைவர் பத்மினிபா வாலா தொடர் உண்ணாவிரத போராட்டம் நடத்தி வருகிறார். ரூபாலாவை நீக்கும் வரை போராட்டம் தொடரும் என தெரிவித்துள்ள ராஜபுத்திர அமைப்புகள், அவரை நீக்கா விட்டால் பாஜ அலுவலகங்கள் முன் தீக்குளிப்பு போராட்டம் நடத்துவோம் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இல்லையெனில் பாஜவை தோற்கடிப்போம் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர். அதன்படி கடந்த 7ம் தேதி காந்திநகரில் உள்ள பாஜ தலைமை அலுவலகம் செல்ல முயன்ற ராஜ்புத் கர்னி சேனா அமைப்பு தலைவர் மக்ரானா உள்ளிட்ட பெண்களை காவல்துறையினர் கைது செய்தனர். காந்தி நகரில் உள்ள பாஜ அலுவலகத்தை முற்றுகையிட சென்ற கர்னி சேனா அமைப்பின் தேசிய தலைவர் ஷெகாவத்தை அகமதாபாத் விமான நிலையத்தில் காவல்துறையினர் கைது செய்தனர்.
The post ராஜபுத்திரர்கள் பற்றி சர்ச்சை பேச்சு ரூபாலாவுக்கு எதிராக வலுக்கும் போராட்டம்: பாஜ அலுவலகம் முற்றுகை, கர்னி சேனா தலைவர் கைது appeared first on Dinakaran.