×

மபி வனப்பகுதியில் சென்ற போது பூப்பறித்த பெண்களுடன் உரையாடிய ராகுல்காந்தி: பிரசாரத்திற்கு நடுவே சுவாரஸ்யம்

போபால்: காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி நேற்று முன்தினம் மத்திய பிரதேசத்தின் சியோனி மற்றும் மண்டலா மாவட்டங்களில் நடந்த தேர்தல் பிரசார பேரணிகளில் பங்கேற்றார். ஷாதோலில் இருந்து இரவு ஹெலிகாப்டர் மூலம் டெல்லிக்கு திரும்ப அவர் திட்டமிட்டிருந்தார். ஆனால் மோசமான வானிலை காரணமாக ஹெலிகாப்டரை இயக்க முடியாததால், ஷாதோலில் உள்ள ஓட்டலில் நேற்று முன்தினம் இரவு ராகுல் தங்கினார்.

பின்னர் நேற்று காலை அவர் காரில் புறப்பட்டார். அப்போது அவரது கார், உமாரியா நகரத்தை ஒட்டிய காட்டுப்பகுதியில் வந்த போது அங்கு சில பெண்கள் மஹுவா மலர்களை சேகரித்துக் கொண்டிருந்தனர். மபியின் அடர்ந்த காடுகளில் காணப்படும் மஹுவா மரங்கள், பழங்குடியின மக்களின் முக்கிய வாழ்வாதாரமாக இருந்து வருகிறது.

ரத்தின் கீழே விழுந்த பூக்களை சேகரித்துக் கொண்டிருந்த பெண்கள் திடீரென ராகுலை பார்த்ததும் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர். அவர்களுடன் கலந்துரையாடிய ராகுல், அப்பெண்களின் பிரச்னைகள், சவால்கள், கோரிக்கைகளை கேட்டறிந்தார். அவர்களுடன் சேர்ந்து புகைப்படமும் எடுத்துக் கொண்டார். பின்னர் அங்கிருந்து ராகுல் காரில் புறப்பட்டுச் சென்றார். சூறாவளி பிரசாரத்திற்கு நடுவே ராகுல், வனப்பகுதியில் பூப்பறித்த பெண்களை சென்று சந்தித்து பேசிய வீடியோக சமூக ஊடகங்களில் வைரலாகி உள்ளது.

The post மபி வனப்பகுதியில் சென்ற போது பூப்பறித்த பெண்களுடன் உரையாடிய ராகுல்காந்தி: பிரசாரத்திற்கு நடுவே சுவாரஸ்யம் appeared first on Dinakaran.

Tags : Rahul Gandhi ,Mabi Forest ,Bhopal ,Former ,Congress ,president ,Seoni ,Mandla ,Madhya Pradesh ,Delhi ,Shahdol ,
× RELATED சொல்லிட்டாங்க…