×

விபத்தில் சிக்கிய பஸ், கார்கள் ; 8 பேர் பலி

சென்னை: திருப்பூரில் இருந்து திருச்சிக்கு அரசு பஸ் நேற்று அதிகாலை சென்று கொண்டிருந்தது. திருப்பூர் காங்கயம் ரோடு நல்லிக்கவுண்டன் நகர் பகுதியைச் சேர்ந்த சந்திரசேகரன் என்பவர் தனது குடும்பத்தினர் 6 பேருடன் அவர்களது சொகுசு காரில் நேற்று முன்தினம் திருக்கடையூர் கோயிலுக்கு சென்றுவிட்டு மீண்டும் திருப்பூர் வந்து கொண்டிருந்தனர். காரை சந்திரசேகரனின் இளைய மகன் இளவரசன் (26) ஓட்டி வந்தார்.

நேற்று அதிகாலை 2.30 மணிக்கு வெள்ளகோவில் ஓலப்பாளையம் பாரத் பெட்ரோல் பங்க் அருகே வந்தபோது அரசு பஸ்சும், காரும் எதிர்பாராத விதமாக நேருக்குநேர் பயங்கரமாக மோதிக்கொண்டது. இதில், காரில் பயணித்த சந்திரசேகரன் (60), அவரது மனைவி சித்தரா (57), அவர்களது மருமகள் அரவித்ரா (30), 3 மாதமான பேத்தி சாக்சி மற்றும் இளவரசன் ஆகியோர் சம்பவ இடத்தில் பலியாகினர். சந்திரசேகரன் மூத்த மகன் சசிதரனை படுகாயமடைந்தார்.

மற்றொரு விபத்து: நெல்லை மாவட்டம் வள்ளியூர் மெயின் ரோட்டைச் சேர்ந்தவர் டாக்டர் ரவீந்திரன் (62). இவரது மனைவி டாக்டர் ரமணி (59). இவர்கள் வள்ளியூரில் தனியார் மருத்துவமனை நடத்தி வருகின்றனர். நேற்று காலை டாக்டர் தம்பதி மற்றும் ரவீந்திரனின் தாயார் சேர்மத்தாய் (80) ஆகியோர் சிவகாசி சென்றுவிட்டு காரில் மதியம் ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தனர். காரை ரவீந்திரன் ஓட்டினார்.
தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அடுத்த வடக்கு இலந்தைகுளம் அருகே கார் வரும்போது திடீரென நிலை தடுமாறி சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் ரவீந்திரன் உட்பட மூவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

The post விபத்தில் சிக்கிய பஸ், கார்கள் ; 8 பேர் பலி appeared first on Dinakaran.

Tags : Chennai ,Tiruppur ,Trichy ,Chandrasekaran ,Tiruppur Kangayam Road Nallikaundan Nagar ,Mundinam ,Thirukkadaiyur Temple ,Dinakaran ,
× RELATED காங்கேயம் அருகே வீட்டின் மேல் விழும்...