×

10 ஆண்டில் அணி மாறிய 25 பேர் பாஜவில் சேர்ந்ததும் புனிதமான தலைவர்கள்: ‘பாஜ வாஷிங் மெஷின்’ குற்றச்சாட்டை நிரூபிக்கும் வகையில் வெளியாகியுள்ள பரபரப்பு தகவல்கள்

அமலாக்கத்துறை, சிபிஐ, வருமான வரித்துறை மூலம் மிரட்டி எதிர்க்கட்சியின் முக்கிய தலைவர்கள், எம்பி, எம்எல்ஏக்களை பாஜ தன்பக்கம் வளைத்து வருகிறது என்பது தொடர்ந்து முன்வைக்கப்படும் குற்றச்சாட்டு. 2014ம் ஆண்டில் பாஜ ஆட்சிக்கு வந்ததில் இருந்து எதிர்க்கட்சி தலைவர்கள் மீது மேற்கண்ட ஒன்றிய ஏஜென்சிகள் மூலம் போடப்படும் வழக்குகள் அதிகரித்து வந்துள்ளன. கடைசியாக டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் வரை இது தொடர்ந்து வந்திருக்கிறது.

இந்நிலையில், அஜித்பவார், பிரபுல் படேல், சுவேந்து அதிகாரி உட்பட சிபிஐ, அமலாக்கத்துறை, ஐடி வழக்குகளில் சிக்கிய 25 எதிர்க்கட்சி தலைவர்கள் பாஜவில் அல்லது பாஜ கூட்டணியில் சேர்ந்துள்னர். இவர்களில் 23 பேரில் 3 பேர் வழக்குகளில் இருந்து விடுவிக்கப்பட்டு விட்டனர். 20 பேர் மீதான வழக்கு விசாரணை கிடப்பில் போடப்பட்டு விட்டது தெரிய வந்துள்ளது.

ஊழல் கறை படிந்தவர்களை சுத்தப்படுத்தும் வாஷிங்மெஷின் என பாஜ மீதான எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டை நிரூபிக்கும் வகையில் அம்பலம் ஆகியுள்ள இந்த விவரங்கள், நாடாளுமன்ற தேர்தல் தருணத்தில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. இவர்களில் 10 பேர் காங்கிரஸ் , நான்கு பேர் தேசியவாத காங்கிரஸ், 4 பேர் சிவசேனா, 3 பேர் திரிணாமுல் காங்கிரஸ், 2 பேர் தெலுங்கு தேசம் கட்சி, சமாஜ்வாதி மற்றும் ஒய்எஸ்ஆர்சிபியில் இருந்த தலா ஒருவர் அடங்குவர்.

* அஜித்பவார்: மகாராஷ்டிரா மாநில கூட்டுறவு வங்கி முறைகேடு தொடர்பாக, தேசியவாத காங்கிரஸ் தலைவர்கள் அஜித்பவார், சரத்பவார் உள்ளிட்டோர் மீது , மும்பை ஐகோர்ட் உத்தரவின்படி பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீசார் 2019 ஆகஸ்ட் மாதம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

இதன்பிறகு இந்த வழக்கில் காங்கிரஸ் தலைவர்கள் ஜெயந்த் பாட்டீல், திலீப்ராவ் தேஷ்முக் மற்றும் மறைந்த மதன் பாட்டீல், தேசியவாத காங்கிரஸ் தலைவர்கள் ஈஸ்வர்லால் ஜெயின், சிவாஜி ராவ் நலவாடே மற்றும் சிவசேனா தலைவர் ஆனந்தராவ் அன்சுல் ஆகியோர் பெயர்களும் சேர்க்கப்பட்டன. அஜித்பவார் , மகாராஷ்டிராவில் ஆளும் சிவசேனா – பாஜ கூட்டணி அரசில் இணைந்து துணை முதல்வரான பிறகு இந்த வழக்கு விசாரணை நின்று விட்டது. வழக்கு விவரம்:
2019 ஆகஸ்ட்: மும்பை பொருளாதார குற்றப்பிரிவு போலீஸ் வழக்குப்பதிவு.
2019 செப்டம்பர்: பொருளாதர குற்றப்பிரிவு விசாரணை துவக்கம்.
2020 அக்டோபர்: பொருளாதார குற்றப்பிரிவு வழக்கை முடித்து விட்டது. இதை எதிர்த்து அமலாக்கத்துறை அப்பீல் செய்தது.
2022 ஏப்ரல்: அமலாக்கத்துறை அஜித்பவாரின் பெயரை சேர்க்காமல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.
2022 ஜூன்: சிவசேனா இரண்டாக பிளவுபட்டு, ஷிண்டே தலைமையில் உருவான அணி பாஜவுடன் கூட்டணி சேர்ந்து மகாராஷ்டிராவில் ஆட்சியை பிடித்தது.
2022 அக்டோபர்: அமலாக்கத்துறை வழங்கிய ஆதாரங்களின் அடிப்படையில் மும்பை குற்றப்பிரிவு போலீஸ் மீண்டும் விசாரணையை துவக்க தயாரானது.
2023 ஜூலை: அஜித்பவார் ஷிண்டே – பாஜ கூட்டணியில் இணைந்து மகாராஷ்டிரா துணை முதல்வரானார்.
2024 ஜனவரி: வழக்கினை முடிப்பதாக இரண்டாவது அறிக்கையை பொருளாதார குற்றப்பிரிவு போலீஸ் சமர்ப்பித்தது.
தற்போதைய நிலை: பொருளாதார குற்றப்பிரிவின் வழக்கு முடிப்பு அறிக்கையில் தங்களையும் இணைத்துக் கொள்ள அமலாக்கத்துறை மனு கொடுத்துள்ளது.

* பிரபுல் படேல்: சிவில் விமான போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த பிரபுல் படேல் மீது ஏர் இந்தியா மூலம் 111 விமானங்களை வாங்கியதில் முறைகேடு மற்றும் ஏர் இந்தியா – இந்தியன் ஏர்லைன்ஸ் இணைப்பில் வெளிநாட்டு விமான நிறுவனங்கள் லாபம் பெற வழிவகுத்தது , வெளிநாட்டு முதலீட்டில் பயிற்சி நிறுவனங்கள் திறந்தது, தீபக் தல்வாருடன் தொடர்பாக குற்றம் சாட்டப்பட்டு, அமலாக்கத்துறையும், சிபிஐயும் விசாரணை நடத்தி வந்தன. பாட்டீலின் பெயர் எப்ஐஆரில் இடம்பெறவில்லை. ஆனால், குற்றம் சாட்டப்பட்டவர்கள் பட்டியலில் அவர் பெயர் இடம் பெற்றுள்ளது.
வழக்கின் விவரம்: 2017 மே: ஏர் இந்தியா – இந்தியன் ஏர்லைன்ஸ் இணைப்பு முறைகேடு குறித்து சிபிஐ எப்ஐஆர் பதிவு செய்தது.
2019 மே: பாட்டீல் பெயரை குற்றப்பத்திரிகையில் சேர்த்தது அமலாக்கத்துறை.
2023 ஜூன்: படேல் பாஜ கூட்டணியில் சேர்ந்தார்.
2024 மார்ச்: வழக்கை மூடுவதாக சிபிஐ அறிக்கை சமர்ப்பித்தது.
தற்போதைய நிலை: வழக்கை மூடக் கோரிய விவாரம் கோர்ட்டில் நிலுவையில் உள்ளது.

* யாமினி மற்றும் யஷ்வந்த் ஜாதவ்: அந்நிய செலாவணி பரிவர்த்தனை முறைகேடு தொடர்பாக எம்எல்ஏ யாமினி மற்றும் அவரது கணவரும் கவுன்சிலருமான யஷ்வந்த் ஜாதவ் மீது அமலாக்கத்துறை உட்பட பல்வேறு ஒன்றிய புலனாய்வு அமைப்புகள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தின. யாமினி மற்றும் அவரது உறவினர் நிறுவனங்கள் இந்த முறைகேட்டில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டது. ஜாதவ் மற்றும் அவரது உறவினர்கள் சிலர் இந்த நிறுவனங்களில் ஒன்றின் மூலம் உத்தரவாதமற்ற கடன் பெற்றதாகவும் குறறச்சாட்டு உள்ளது. 2022ல் இவர்களுக்கு சொந்தமான 40 சொத்துக்களை வருமான வரித்துறை முடக்கியது. வழக்கு விவரம்:  2022 பிப்ரவரி: யாமினி மற்றும் அவரது கணவருக்கு சொந்த மான இடங்களில் வருமான வரித்துறை ரெய்டு நடத்தியது.
2022 மே: யாமினியின் கணவர் மீது வழக்குப்பதிவு செய்த அமலாக்கத்துறை, விசாரணைக்கு ஆஜராக சம்மன் அனுப்பியது.
2022 ஜூன்: ஷிண்டேயுடன் பாஜவின் என்டிஏ கூட்டணியில் யாமினி இணைந்தார்.
தற்போதைய நிலை: வழக்கு கிடப்பில் போடப்பட்டு விட்டது; எந்த முன்னேற்றமும் இல்லை.

* ஹேமந்த் பிஸ்வா சர்மா: தற்போதைய அசாம் முதல்வரான இவர் மீது, 2014 மற்றும் 2015 ஆண்டுகளில் சாரதா சிட்பண்ட் மோசடியில் ஈடுபட்ட சுதிப்தான சென்னுடன் தொடர்புடைய பண பரிவர்த்தனை வழக்கில் சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை ஆகியவை விசாரணை நடத்தி வந்தன. இவரது வீட்டில் அப்போது சிபிஐ ரெய்டு நடத்தியது. விசாரணை செய்தது. மேலும், கோவாவில் குடிநீர் திட்டம் ஒப்பந்தத்துக்கு லஞஅசம் வழங்கியது தொடர்பான வழக்கிலும் இவர் பெயர் இடம் பெற்றிருந்தது. ஆனால் அந்த வழக்கில் பின்னர் முன்னேற்றம் எதுவும் இல்லை.
கடந்த வந்த பாதை: 2014 ஆகஸ்ட். ஹிமந்தா பிஸ்வாஸ் சர்மா வீடுகளில் சிபிஐ ரெய்டு நடத்தியது.
2014 நவம்பர்: சிபிஐ அவரிடம் விசாரணை செய்தது.
2015 ஆகஸ்ட்: பிஸ்வாஸ் சர்மா பாஜவில் இணைந்தார்.
தற்போதைய நிலை: வழக்கு முடியவில்லை; ஆனால், அடுத்த கட்ட நடவடிக்கையும் எதுவுமில்லை.

* ரனீந்தர் சிங்: இவர், பஞ்சாப் முன்னாள் முதல்வர் கேப்டன் அம்ரீந்தர் சிங்கின் மகன் . அந்நிய செலாவணி முறைகேடு தொடர்பாக வருமான வரித்துறை குற்றச்சாட்டின் அடிப்படையில் இவர் மீது அமலாக்கத்துறை வழக்கு உள்ளது. 2016ல் இவர் அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரானார். 2018 மார்ச்சில் அம்ரீந்தர் சிங்கின் மருமகன் குர்பால்சிங்கிடம் சிம்பவுலி சுகர்ஸ் நிறுவனத்தில் ரூ.98 கோடி மோசடி தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்திது. இந்த நிறுவனத்தின் துணை பொது மேலாளராக குர்பால் சிங் இருந்தார். சிபிஐ எப்ஐஆர் அடிப்படையில் அமலாக்கத்துறை பண பரிவர்த்தனை மோசடி வழக்கு பதிவு செய்து இவரது ரூ.110 கோடி மதிப்பிலான மில் சொத்துக்களை 2019 ஜூலையில் முடக்கியது.
2020 நவம்பர்: ரனீந்தரிடம் அமலாக்கத்துறை விசாரணை.
2021 நவம்பர்: காங்கிரசில் இருந்து விலகினார் அம்ரீந்தர் சிங்.
2022 செப்டம்பர்: பாஜவில் இணைந்தார்.
தற்போதைய நிலை: வழக்கு கிடப்பில் போடப்பட்டு விட்டது.

* சஞ்சய் சேத்: சமாஜ்வாதி கட்சி எம்பியாக இருந்த இவருக்கு சொந்தமான சாலிமர் கார்ப்பொரேஷன் அலுவலகங்களில் 2015ல் ஐடி ரெய்டு நடந்தது. பின்னர் எம்எல்சி யாக இவரை நியமிக்க உ.பி.கவர்னர் ஆட்சேபம் தெரிவித்தார். பின்னர் 2016ல் இவர் சமாஜ்வாதி கட்சி சார்பில் மாநிலங்களவை எம்பி ஆனார். முலாயம் சிங் யாதவ் குடும்பத்துக்கு நெருக்கமன இவர் , 2019ல் சமாஜ்வாதி – பிஎஸ்பி கூட்டணி உருவாக முக்கியப் பங்காற்றியவர். ஆனால், தற்போதைய மாநிலங்களவை தேர்தலில் சேத் பாஜ சார்பில் அறிவிக்கப்பட்டார்.
2015 ஜூன்: சஞ்சய் சேத் நிறுவனங்களில் ஐடி ரெய்டு.
2019 ஆகஸ்ட்: சேத் பாஜவில் இணைந்தார்.
2023 ஜூலை: இவரது நிறுவன அதிகாரிகள் விசாரிக்கப்பட்டனர்.
2024 பிப்ரவரி: உ.பியில் இருந்து மாநிலங்களவை எம்பியாக இவரை தேர்வு செய்ய பாஜ சார்பில் இவர் நிறத்தப்பட்டார்.
தற்போதைய நிலை: விசாரணை நடைபெற்றாலும்; நடவடிக்கை எதுவும் இல்லை.

* சி.எம்.ரமேஷ்: 2018 அக்டோபரில் அப்போதைய தெலுங்குதேசம் எம்பியான இவரது நிறுவனங்களில் ரூ.100 கோடி முறைகேடு குற்றச்சாட்டு தொடர்பாக ஐடி ரெய்டு நடந்தது. இதையடுத்து இவரைத் தகுதி நீக்கம் செய்ய பாஜ எம்பி ஜிவிஎல் நரசிம்மராவ் நாடாளுமன்ற நெறிமுறைக் குழுவுக்குக் கடிதம் எழுதினார்.
வழக்கு விவரம்: 2018 அக்டோபர்: சி.எம்.ரமேஷ் நிறுவனங்களில் ஐடி ரெய்டு.
2019: பாஜவில் இணைந்தார்.
தற்போதைய நிலை: இதன்பிறகு வழக்கில் எந்த நடவடிக்கையும் இல்லை.

* கே.கீதா: ஒய்எஸ்ஆர்சிபி எம்பியான இவர் மற்றும் இவரது கணவர் பி.ராமகோடீஸ்வரராவுக்கு சொந்தமான நிறுவனமான விஸ்வேஸ்வரா இன்ப்ராஸ்டிரக்சர் நிறுவனம் பஞ்சாப் நேஷனல் வங்கியில் மோசடி ஆவணங்களை சமர்ப்பித்து ரூ.42 கோடி கடன் வாங்கி மோசடி செய்ததாக குற்றம் சாட்டப்பட்டு, இவர்களது பெயர்கள் 2015ம் ஆண்டில் சிபிஐ குற்றப்பத்திரிகையில் இடம் பெற்றன. கடந்த மார்ச் 12ல் இந்த வழக்கில் இவர்கள் மீதான தீர்ப்பை தெலங்கானா ஐகோர்ட் நிறுத்தி வைத்தது. கடந்த மார்ச் 28ம் ேததி இவர் பாஜ சார்பில் அராக்கு தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

* சோவன் சாட்டர்ஜி: கொல்கத்தா மேயராகவும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவராகவும், எம்எல்ஏவாகவம் இருந்தவர். நாரதா லஞ்ச ஊழல் வழக்கில் முக்கிய குற்றவாளியாக இவர் பெயர் சேர்க்கப்பட்டு, ஒன்றிய ஏஜென்சிகளால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார். சாரதா சிட்பண்ட் வழக்கிலும் இவர் விசாரிக்கப்பட்டார். இதனிடையே 2018ல் பாஜவில் சேர்ந்த இவருக்கு பெஹாலா பர்பா தொகுதியில் இவருக்கு சீட் தர கட்சி மறுத்து விட்டது. பின்னர் பாஜவில் இருந்து 2021 மார்ச் மாதம் விலகினார். அதே ஆண்டு மே மாதம், நாரதா லஞ்ச ஊழல் வழக்கில் சிபிஐ கைது செய்தது. தற்போது இவர் ஜாமீனில் விடுதலையாகியுள்ளார்.
2017 ஏப்ரல்: நாரதா லஞ்ச ஊழல் வழக்கில் சோவன் சாட்டர்ஜி மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்தது.
2018 நவம்பர்: கொல்கத்தா மேயர் பதவியை ராஜினாமா செய்தார்.
2019 ஆகஸ்ட்: பாஜவில் சேர்ந்தார்.
2021 மார்ச்: இவருக்கு சீட் தர பாஜ மறுத்ததால் பாஜவில் இருந்து விலகினார்.
2021 மே: பாஜவில் இருந்து விலகியதை அடுத்து இவரை சிபிஐ கைது செய்தது.
வழக்கின் தற்போதைய நிலை: இவர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

* சகன் புஜ்பால்: `2006ம் ஆண்டு மகாராஷ்டிரா மாநில பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்தபோது ரூ.100 கோடி மதிப்பிலான ஒப்பந்தத்தை முறைகேடாக வழங்கியதாக இவர் மீது 2015ம் ஆண்டு மகாராஷ்டிரா மாநில ஊழல் தடுப்பு பிரிவினர் வழக்குப்பதிவு செய்தனர். இதன் அடிப்படையில் இவர் மீது அமலாக்கத்துறையினர் பண பரிவர்த்தனை மோசடி வழக்கு பதிவு செய்து , 2016 மார்ச் மாதம் கைது செய்தனர். 2018 மே மாதம் இவர் புஜ்பாலுக்கு ஜாமீன் கிடைத்தது. வெளிநாடு செல்லவும் அனுமதி கோரினார். புஜ்பாலுக்கு ஜாமீன் வழங்கவும், வெளிநாடு செல்ல ஆட்சேபித்து அமலாக்கத்துறை தாக்கல் செய்த மனு 4 ஆண்டுகளாக நிலுவையில் உள்ளதை கோர்ட் சுட்டிக் காட்டிய நிலையில், இந்த மனுவை அமலாக்கத்துறை திரும்பப் பெற்றது.
2016 மார்ச்: ஊழல் வழக்கில் புஜ்பாலை அமலாக்கத்துறை கைது செய்தது.
2016 ஏப்ரல்: அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகை தாக்கல்.
2018 மே: 2 ஆண்டுகள் சிறையில் இருந்த புஜ்பால் விடுதலையானார்.
2021 செப்டம்பர்: சிறப்பு நீதிமன்றம் அவரை விடுவித்தது.
2023 ஜூலை: அஜித்பவாருடன் என்டிஏ கூட்டணியில் சேர்ந்தார்.
2023 நவம்பர்: வழக்கு ஆமை வேகத்தில் நகர்வதாக சிறப்பு நீதிமன்றம் விமர்சித்தது.
2023 டிசம்பர்: புஜ்பால் வெளிநாடு செல்ல தடை கோரிய மனுவை அமலாக்கத்துறை திரும்பப் பெற்றது.
தற்போதைய நிலை: வழக்கு விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

* ஹசன் முஸ்ரிப்: மகாராஷ்டிரா மாநிலம் கோலாப்பூரில் சர் சேனாபதி சன்தாஜி கோர்பாடே சர்க்கரை ஆலையில் பண பரிவர்த்தனை முறைகேடு தொடர்பாக இவர் மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்தது. இந்த ஆலைக்காக 40 ஆயிரம் விவசாயிகளிடம் மூலதன பங்கு வாங்கப்பட்ட பிறகு அவர்களுக்கு அதற்கான சான்று வழங்கப்படவில்லை எனவும், இந்த பணம் போலி நிறுவனங்கள் மூலம் முஸ்ரிப் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களின் நிறவனங்களுக்கு மாற்றப்பட்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டது.
2023 பிப்.-மார்ச்: அமலாக்கத்துறை முஸ்ரிப்பின் வீட்டில் மூன்று முறை ரெய்டு நடத்தியது.
2023 ஜூலை: அஜித்பவாருடன் பாஜவின் என்டிஏ கூட்டணியில் இணைந்தார் முஸ்ரிப்.
தற்போதைய நிலை: வழக்கு மூடப்படவில்லை; அடுத்த கட்ட நடவடிக்கையும் இல்லை.

* பாவனா கவாலி: யவத்மால் – வாஷிம் எம்பியான இவர் மீதும், இவருக்கு நெருக்கமானவர்கள் மீதும், அறக்கட்டளை ஒன்றில் இருந்து ரூ.17 கோடி எடுத்தது தொடர்பாக குற்றம் சாட்டப்பட்டு, 2020ல் அமலாக்கத்துறை ரெய்டு நடத்தியது. இவருக்கு நெருக்கமான சயீத் கான் என்பவரின் மும்பை அலுவலகம் முடக்கப்பட்டது.
2021 ஆகஸ்ட்: பாவனா கவாலி வீடு அலுவலகங்களில் அமலாக்கத்துறை ரெய்டு நடத்தியது.
2021 செப்டம்பர்: பாவனாவுக்கு நெருக்கமானவர் கைது செய்யப்பட்டார்.
2021 நவம்பர்: அறக்கட்டளை மற்றும் பாவனாவுக்கு நெருக்கமானவர் மீது அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.
2022 ஜூன்: ஷிண்டேயுடன் பாஜவின் என்டிஏ கூட்டணியில் பாவனா கவாலி இணைந்தார்.
தற்போதைய நிலை: வழக்கில் முன்னேற்றமில்லை; துணை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவில்லை.

* பிரதாப் சர்னைக்: சிவசேனா செய்தித்தொடர்பாளரான இவர் மீது பணப் பரிவர்த்தனை முறைகேடு தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதன்பிறகு 2021ம் ஆண்டு ஜூன் மாதம் அப்போதைய மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரேவுக்கு இவர் எழுதிய கடிதத்தில், அமலாக்கத்துறை நெருக்கடி , மிரட்டல்கள் இருப்பதால் பாஜவுடன் சேர்வது குறித்து குறிப்பிட்டார். 2022ம் ஆண்டு ஜூன் மாதம் சிவசேனா பிளவு பட்டபோது ஷிண்டேவுடன் வெளியேறி பாஜ கூட்டணியில் இணைந்தார். தேசிய ஸ்பாட் எக்ஸ்சேஞ்ச் நிறுவன முறைகேடு தொடர்பாகவும் இவர் மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது. வழக்கு விவரம்: 2020 நவம்பர்: மும்பை குற்றப்பிரிவு போலீஸ் எப்ஐஆர் அடிப்படையில் இவரது வீடு, அலுவலகங்களில் அமலாக்கத்துறை ரெய்டு நடத்தியது.
2021 ஜனவரி: அமலாக்கத்துறை வழக்கை மூடுவதாக அறிக்கை சமர்ப்பித்தது.
2022 ஜூன்: பிரதாப் சர்னைக் ஷிண்டேவுடன் வெளியேறி பாஜ கூட்டணியில் இணைந்தார்.
2022 செப்டம்பர்: வழக்கை மூடுவதாக அமலாக்கத்துறை சமர்ப்பித்த அறிக்கையை கோர்ட் ஏற்றுக் கொண்டது.
தற்போதைய நிலை: மற்றொரு வழக்கு விசாரணை நடந்து வருகிறது. வழக்கில் அடுத்த கட்ட நடவடிக்கை எதுவும் இல்லை.

* சுவேந்து அதிகாரி: மேற்கு வங்கத்தில் நாரதா லஞ்ச ஊழல் வழக்கில் சுவேந்து அதிகாரி உட்பட 11 திரிணாமுல் தலைவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. நிறுவனங்களுக்கு சாதகமாக செயல்பட இவர்கள் லஞ்சம் வாங்கியதாக வீடியோ ஆதாரங்கள் 2014 மற்றும் 2016ல் தேர்தல் சமயத்தில் வெளியிடப்பட்டன. இதன் அடிப்படையில்தான் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
2017 ஏப்ரல்: நாரதா லஞ்ச வழக்கில் சிபிஐ வழக்குப்பதிவு செய்தது.
2019 ஏப்ரல்: குற்றச்சாட்டின்போது சுவேந்து அதிகாரி எம்பியாக இருந்ததால், இவர் மீது விசாரணை நடத்த சபாநாயகர் அனுமதி கோரப்பட்டது.
2020 டிசம்பர்: சுவேந்து அதிகாரி பாஜவில் சேர்ந்தார்.
தற்போதைய நிலை: விசாரணைக்கு இதுவரை சபாநாயகர் ஒப்புதல் தரவில்லை.

* கிரிபாசங்கர் சிங்: 2012ல் காங்கிரஸ் தலைவராக இவர் இருந்தபோது, வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதன் அடிப்படையில் அமலாக்கத்துறை கிரிபாசங்கர் சிங் மற்றும் அவரது மகன் மீது பண பரிவர்த்தனை மோசடி வழக்கு போட்டது.
2012 பிப்ரவரி: வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக கிரிபாசங்கர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
2013 டிசம்பர்: இவரிடம் விசாரணை நடத்த சபாநாயகரிடம் அனுமதி கோரப்பட்டது.
2015 ஏப்ரல்: சபாநாயகர் அனுமதி வராமலேயே, சஞ்சய் சிங் முறைகேடாக ரூ.95 கோடி சொத்து சேர்த்ததாகவும் இதில் ரூ.18 கோடி வருமானத்துக்கு அதிகமாக சேர்த்ததாகவும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
2018 பிப்ரவரி: அனுமதி பெறாமல் வழக்கு போடப்பட்டதால் கோர்ட் இவரை விடுவித்தது.
2019 செப்டம்பர்: காங்கிரசில் இருந்து ராஜினாமா செய்தார்.
2021 ஜூலை: பாஜவில் இணைந்தார்.
இதுபோல் காங்கிரசை சேர்ந்த திகம்பர் காமத், அசோக் சவான், நவீன் ஜிண்டால், அர்சனா பாட்டீல், கீதா கோடா, பாபா சித்திக், ஜோதி மிர்தா , தெலுங்குதேசம் கட்சியின் சுஜானா சவுதாரி உட்பட 25 பேர் மீதும் ஊழல் வழக்கு இருந்தும் விசாரணை அழுத்தத்தில் இருந்து விடுபட்டுள்ளனர். இவர்களில் 23 பேரில் 3 பேர் வழக்குகளில் இருந்து விடுவிக்கப்பட்டு விட்டனர். 20 பேர் மீதான வழக்கு விசாரணை கிடப்பில் போடப்பட்டு விட்டது தெரிய வந்துள்ளது.

The post 10 ஆண்டில் அணி மாறிய 25 பேர் பாஜவில் சேர்ந்ததும் புனிதமான தலைவர்கள்: ‘பாஜ வாஷிங் மெஷின்’ குற்றச்சாட்டை நிரூபிக்கும் வகையில் வெளியாகியுள்ள பரபரப்பு தகவல்கள் appeared first on Dinakaran.

Tags : BJP ,Enforcement Department ,CBI ,Income Tax Department ,Dinakaran ,
× RELATED முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி...