- மூலங்குடி தேனிகண்மயில் மீன்பிடி திருவிழா
- Ponnamaravati
- புதுக்கோட்டை மாவட்டம்
- மூலங்குடி
- கன்மாய்
- தேனிகண்மாய்
பொன்னமராவதி: புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அடுத்த மூலங்குடியில் தேனிக்கண்மாய் உள்ளது. இந்த கண்மாயில் ஒவ்ெவாரு ஆண்டும் மீன்பிடி திருவிழா நடைபெறும். அதன்படி தேனிக்கண்மாயில் இன்று காலை 6 மணிக்கு மீன்பிடி திருவிழா துவங்கியது. முன்னதாக ஊர் முக்கியஸ்தர்கள் பங்கேற்று சிறப்பு வழிபாடு நடத்தினர். இதைதொடர்ந்து பொதுமக்கள் கண்மாயில் இறங்கி மீன்களை பிடித்தனர்.
மூலங்குடி, வெட்டியப்பட்டி, ஆலவயல், செம்பூதி, மேலநிலை, செல்லூர், உலகம்பட்டி உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த 2,000க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பங்கேற்று வலை, கூடை மற்றும் கொசுவலை உள்ளிட்ட பல்வேறு உபகரணங்களை பயன்படுத்தி மீன்களை போட்டி போட்டு பிடித்தனர். ஜிலேபி, கெண்டை, விரால் உள்ளிட்ட மீன்கள் அதிகளவில் சிக்கியது.இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், தேனிக்கண்மாயில் அதிகளவில் மீன்கள் சிக்கியது. ஒரு சில மீன்கள் 2 கிலோ வரை இருந்தது. குறைந்தது ஒவ்வொருவரும் 5 கிலோ வரையிலான மீன்களை பிடித்து சென்றனர் என்றனர்.
The post மூலங்குடி தேனிக்கண்மாயில் மீன்பிடி திருவிழா appeared first on Dinakaran.