- அமைச்சர்
- உதயநிதி ஸ்டாலின்
- சேலம் ஆத்தூர்
- கள்ளக்குறிச்சி
- திமுக
- சேலம்
- ஆத்தூர்
- சேலம் மாவட்டம்
- மலையரசன்
- திமுக அரசு
- தின மலர்
சேலம்: கள்ளக்குறிச்சி தொகுதி திமுக வேட்பாளர் மலையரசனை ஆதரித்து சேலம் மாவட்டம் ஆத்தூரில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பரப்புரை மேற்கொண்டுள்ளார். திமுக அரசின் திட்டங்களை பட்டியலிட்டு வாக்கு சேகரித்தார். அப்போது பேசிய அவர், திமுக அளித்த தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றி இருப்பதாக தெரிவித்தார். நாடாளுமன்றத் தேர்தலில் ‘இந்தியா’ கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைத்தால், நிச்சயம் பெட்ரோல் விலை ரூ.75, டீசல் விலை ரூ.65, சமையல் எரிவாயு விலை ரூ.500 ஆக குறைக்கப்படும். தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள அனைத்து சுங்கச்சாவடிகளும் அகற்றப்படும்.
விவசாயம் சார்ந்த தொழிற்சாலைகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார். முதல்வரின் காலை உணவுத் திட்டத்தை பிற மாநிலங்களும் பின்பற்றுகின்றன. சேலம் மாவட்டத்தில் புதுமைப்பெண் திட்டத்தால் 20 ஆயிரம் மாணவிகள் பயன்பெற்றுள்ளனர். பாஜக, பாமக கூட்டணியை மக்கள் நம்பவில்லை என அமைச்சர் குறிப்பிட்டார். சேலம் மாவட்டம் ஆத்தூரில் வெளிவட்ட சாலை அமைக்கப்படும் எனவும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாக்குறுதி அளித்துள்ளார். மாநில உரிமைகளை விட்டுக்கொடுத்தவர் பழனிசாமி எனவும் விமர்சித்தார்.
The post சேலம் ஆத்தூரில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம்; கள்ளக்குறிச்சி திமுக வேட்பாளருக்கு ஆதரவு திரட்டினார்..!! appeared first on Dinakaran.