- அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வ்லாசல்
- ஆதிமுக
- மதுரை
- பாஜக
- அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்
- சிபிஎம்
- ஷு
- வெங்கடேசன்
- டாலி
- தின மலர்
மதுரை: உலகத்திலேயே ஊழலைப் பற்றி பேசுவதற்கு ஒரு கட்சிக்கு தகுதி இல்லை என்றால், அது பாஜகதான் என்று அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார். மதுரை சிபிஎம் வேட்பாளர் சு.வெங்கடேசனை ஆதரித்து அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பிரச்சாரம் செய்தார். அப்போது பேசிய அவர்,
அதிமுக ஆட்சியிலேயே தாலிக்கு தங்கம் நிறுத்தம்:
கடந்த அதிமுக ஆட்சியில் 4 ஆண்டுகளாக தாலிக்கு தங்கம் திட்டத்தை நிறுத்தி வைத்திருந்தது என்று அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார். அதிமுக ஆட்சியில் தாலிக்கு தங்கமும் வாங்கவில்லை; நிதியும் அதற்காக ஒதுக்கவும் இல்லை. திமுக ஆட்சிக்கு வந்த பின் தாலிக்கு தங்கம் திட்டத்தை நிறுத்திவிட்டார்கள் என்று பச்சை பொய் சொல்கிறார்கள்.
அதிமுக ஆட்சியில் நிறுத்தப்பட்ட திட்டத்துக்கு பதிலாக புதுமைப்பெண் திட்டத்தை செயல்படுத்தினோம். பெண்கள் கல்வி பெறுவதற்காகவே மாதந்தோறும் ரூ.1,000 கல்வி உதவித்தொகை திட்டத்தை செயல்படுத்தினோம். தாலிக்கு தங்கம் திட்டத்தைவிட சிறப்பான திட்டமாக புதுமைப்பெண் திட்டம் துவக்கப்பட்டது என அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறினார்.
ஊழலைப் பற்றி பேச பாஜகவுக்கு தகுதி இல்லை:
நாட்டில் ஜனநாயகத்தை படுகொலை செய்து பணநாயகம் மூலம் பாஜக ஆட்சி செய்து கொண்டிருக்கிறது அரசு என அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்திருக்கிறார். உலகத்திலேயே ஊழலைப் பற்றி பேசுவதற்கு ஒரு கட்சிக்கு தகுதி இல்லை என்றால், அது பாஜகதான்.
ஊழல்வாதிகள் என்று வழக்கு போடப்பட்ட 25 பேர் பாஜகவின் வாஷிங் மெஷினால் சுத்தமாகிவிட்டார்கள். தேர்தல் பத்திரம் மூலம் லாபமே இல்லாத பல நிறுவனங்கள் பாஜகவுக்கு பல நூறு கோடிகளை கொடுத்துள்ளார்கள். பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் நாட்டில் மக்களாட்சி முறையும் நீடிக்காது என அமைச்சர் கடுமையாக விமர்சனம் செய்தார்.
The post கடந்த அதிமுக ஆட்சியில் 4 ஆண்டுகளாக தாலிக்கு தங்கம் திட்டத்தை நிறுத்தி வைத்திருந்தது: அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் விளாசல் appeared first on Dinakaran.