×

நெல்லை நாடாளுமன்ற தொகுதி செலவின கணக்கு தாக்கல் செய்யாத வேட்பாளர்களுக்கு கால அவகாசம் நீட்டிப்பு..!!

நெல்லை: நெல்லை நாடாளுமன்ற தொகுதி செலவின கணக்கு தாக்கல் செய்யாத வேட்பாளர்களுக்கு, கணக்கு தாக்கல் செய்ய கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இன்று மாலை 5 மணிக்குள் கணக்கை தாக்கல் செய்யாத நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என நெல்லை மாவட்ட தேர்தல் அதிகாரி கார்த்திகேயன் எச்சரித்துள்ளார். நெல்லை நாடாளுமன்ற தொகுதியில் மொத்தம் 23 வேட்பாளர்கள் போட்டியிருக்கிறார்கள். அந்த 23 வேட்பாளர்களும் ஏப்ரல் 6, 12 மற்றும் 16 ஆகிய தேதிகளில் அவர்களின் செலவு கணக்குகளை தேர்தல் செலவீன பாதுகாவலர்களிடன் தாக்கல் செய்வதற்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டது.

6ம் தேதி நடைபெற்ற கூட்டத்தில் கலந்துகொண்டவர்கள் மற்றும் கலந்து கொள்ளத்தவர்கள் என 14 பேர் கணக்கு தாக்கல் செய்யாமல் இருந்தனர். அவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பி தேர்தல் செலவீன பார்வையாளர்கள் உத்தரவை பிறப்பித்திருந்தார். 8ம் தேதி மாலை 5 மணிக்குள் அனைத்து தகவல்களையும் ஆவணங்களாக சமர்ப்பித்து கணக்கு தாக்கல் செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.

இல்லாவிட்டால் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்வதுடன் அவர்களுக்கான அனுமதி ரத்து செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், நேற்றைய தினம் மாலை வரை கணக்கு தாக்கல் செய்யக்கூடிய 14 நபர்களில் 11 பேர் கணக்கை ஒப்படைத்துள்ளனர். மீதமுள்ள 3 பேர் எந்த கணக்கையும் ஆவணங்களாக தாக்கல் செய்யாத நிலையில், 3 பேருக்கும் இன்று மீண்டும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இன்று மாலை 5 மணிக்குள் அவர்கள் கணக்கு தாக்கல் செய்யவில்லை எனில் அவர்களுக்கான அனுமதி ரத்து செய்வோம் என மாவட்ட தேர்தல் அதிகாரி எச்சரித்துள்ளார்.

The post நெல்லை நாடாளுமன்ற தொகுதி செலவின கணக்கு தாக்கல் செய்யாத வேட்பாளர்களுக்கு கால அவகாசம் நீட்டிப்பு..!! appeared first on Dinakaran.

Tags : Nellai ,Dinakaran ,
× RELATED நெல்லையில் அரசு பேருந்து ஓட்டுநர்,...