- பாஜக
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- முதல்வார் மு. கே. ஸ்டாலின்
- சென்னை
- முதல் அமைச்சர்
- சட்டமன்ற உறுப்பினர்
- கே. ஸ்டாலின்
- முதல்வார்
- . கே. ஸ்டாலின்
சென்னை : பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் எதிர்காலத்தில் தேர்தல் வராது என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னையில் தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்த அவர்,”தமிழ்நாட்டில் பாஜகவுக்கு ஒரு இடம் கூட கிடைக்காது; தாமரை மலர வாய்ப்பே இல்லை. பாஜக ஒன்றிரண்டு இடங்களில் வெற்றி பெற முயற்சித்தாலும் அது நடக்காது. 400 இடங்களில் வெல்வோம் என கூறி வந்த பிரதமர் தற்போது அப்படி சொல்வதில்லை. அச்சம் வந்துள்ள நிலையில் எத்தனை இடங்களில் வெற்றி பெறுவார்கள் என பிரதமருக்கே தெரியாது. தெற்கிலும், தமிழகத்திலும் தோற்றுவிடுவோம் என்ற பயத்தினால் பிரதமர் அடிக்கடி வருகிறார்.
கடந்த 3 ஆண்டுகளாக தமிழக மக்களுக்காக திமுக அரசு நிறைய செய்துள்ளது. எங்களுக்கு பெரும் வரவேற்பு கிடைக்கிறது; 40க்கு 40 வெல்வோம் என்ற நம்பிக்கை உள்ளது.அமலாக்கத்துறை சோதனைக்கு உள்ளானவர்கள் சேர்ந்தால் கறைபடியாதவர்களாக்கும் வாஷிங்மெஷின்தான் பாஜக. அமலாக்கத்துறை, ஐ.டி, சிபிஐ உடன் கூட்டணி அமைத்திருக்கிறது பாரதிய ஜனதா கட்சி. மக்களை திசை திருப்பவே கச்சத்தீவு விவகாரம் குறித்து பேசுகிறார்கள். தேர்தல் பத்திர முறைகேடு, கணக்கு இல்லாத பி.எம்.கேர் போன்றவற்றில் இருந்து திசைதிருப்ப முயற்சிகள் நடைபெறுகின்றன. ஜனநாயகத்தின் அடிப்படையில் “I.N.D.I.A. ” கூட்டணி உருவாக்கப்பட்டது . பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் எதிர்காலத்தில் தேர்தல் வராது,”இவ்வாறு தெரிவித்தார்.
The post தமிழ்நாட்டில் பாஜகவுக்கு ஒரு இடம் கூட கிடைக்காது; தாமரை மலர வாய்ப்பே இல்லை :முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு appeared first on Dinakaran.