×

கை சின்னத்துக்கு போடும் ஓட்டு.. மோடிக்கு வைக்கும் வேட்டு..

*காங்., வேட்பாளர் வைத்திலிங்கம் ஆவேசம்

புதுச்சேரி : அரியாங்குப்பம் தொகுதியின் பல்வேறு பகுதிகளில் இந்தியா கூட்டணி கட்சி காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கம் வேனில் பிரசாரம் மேற்கொண்டார். அவருடன் முன்னாள் முதல்வர் நாராயணசாமி, காங்கிரஸ் சீனியர் துணைத்தலைவர் தேவதாஸ், முன்னாள் எம்எல்ஏ அனந்தராமன், விஜயலட்சுமி ஜெயமூர்த்தி, திமுக சக்திவேல் ஆகியோர் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். சிறிது தூரம் நடைபயணமாக சென்று வைத்திலிங்கம் பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தார். இதில் கூட்டணி கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக கலந்துகொண்டனர்.

அப்போது வைத்திலிங்கம் எம்பி பேசியதாவது: கடந்த பத்தாண்டு கால தேஜ கூட்டணி ஆட்சியில், இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகள் கிடைக்கவில்லை. நாடு முழுவதும் மூன்றரை கோடி பணியிடங்கள் இன்னும் நிரப்பாமல் வைத்துள்ளனர். புதுச்சேரியிலும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலி பணியிடங்களை நிரப்ப அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. பணியிடங்கள் காலியாக இருக்கிறது. அதே நேரத்தில் ஏன் அரசு வேலை இளைஞர்களுக்கு கொடுக்கவில்லையெனறால், அவர்களுக்கு கொடுக்கும் சம்பள பணத்தை எல்லாம் மிச்சப்படுத்தி அம்பானிக்கும், அதானிக்கும் தரவேண்டும். அதுதான் ஆட்சியாளர்களின் திட்டம். இது உங்களுக்கு நன்றாக தெரியும்.

புதுச்சேரியில் சிறுமி கொல்லப்பட்ட சம்பவத்தில் ஒரு இளைஞரையும், முதியவரையும் கைது செய்து இருக்கிறார்கள். ஆனால் அவர்களை அந்த குற்றத்தை செய்ய தூண்டியது என்ன என்று பார்த்தால் போதைப்பொருள். அந்த போதைப் பொருட்களை விற்றவர் யார் என்று கண்டுபிடித்து விட்டார்களா? ஏன் இன்னும் கண்டுபிடிக்கவில்லை. கை சின்னத்துக்கு போடுகிற ஓட்டு மோடிக்கு வைக்கிற வேட்டு. அதனால் சிந்தித்து வாக்களிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

The post கை சின்னத்துக்கு போடும் ஓட்டு.. மோடிக்கு வைக்கும் வேட்டு.. appeared first on Dinakaran.

Tags : Modi ,Congress ,Vaithilingam ,Avesam Puducherry ,India Alliance ,Arianguppam ,chief minister ,Narayanasamy ,senior ,vice-president ,Devdas ,MLA ,Anantharaman ,
× RELATED என்ன விலை கொடுத்தாவது ஆட்சியைப்...