×

மக்களவை தேர்தல்: சிவசேனா 21, காங்கிரஸ் 17, என்சிபி 10… மராட்டியத்தில் I.N.D.I.A. கூட்டணி கட்சிகளுக்கு இடையே தொகுதி பங்கீடு நிறைவு!!

டெல்லி :மக்களவை தேர்தலையொட்டி மராட்டியத்தில் இண்டியா கூட்டணி தொகுதி பங்கீடு இறுதியாகி உள்ளது. நாட்டின் 18வது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், மராட்டியத்தில் 5 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4ம் தேதி நடைபெறவுள்ளது. இந்த மக்களவைத் தேர்தலில் ஆளும் கட்சியான பாஜகவிற்கு எதிர்கட்சிகளான இண்டியா கூட்டணிக்கும் இடையேதான் கடும் போட்டி நிலவுகிறது. இதைத் தொடர்ந்து பாஜக, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த தலைவர்கள் அனல்பறக்கும் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த நிலையில், மகாராஷ்டிர மாநிலத்தில் இண்டியா கூட்டணி கட்சிகளுக்கு இடையே தொகுதி பங்கீடு இறுதி செய்யப்பட்டுள்ளது. தொகுதி பங்கீடு தொடர்பாக தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத்பவார், சிவசேனா கட்சி தலைவர் உத்தவ் தாக்கரே, காங்கிரஸ் மாநில தலைவர் நானோ பட்டேல் 3 பேரும் கூட்டாக அறிவிப்பு வெளியிட்டுள்ளனர். 48 தொகுதிகளை கொண்ட மகாராஷ்டிர மாநிலத்தில் தொகுதி உடன்பாடு ஏற்பட்டு காங்கிரஸ் கட்சி 17 தொகுதிகளில் போட்டியிடுவதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மகாராஷ்ராவில் இண்டியா கூட்டணி தொகுதி உடன்பாடு ஏற்பட்டு சரத் பவாரின் என்சிபி கட்சி 10 தொகுதிகளில் போட்டியிடுகிறது. மாநிலத்தில் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா கட்சி 21 தொகுதிகளில் போட்டியிடுகிறது. இதனிடையே டெல்லி, உத்தரபிரதேசம், தமிழ்நாடு, கேரளாவில் இந்தியா கூட்டணி இடையிலான தொகுதி பங்கீடு ஏற்கெனவே நிறைவடைந்தது குறிப்பிடத்தக்கது.

The post மக்களவை தேர்தல்: சிவசேனா 21, காங்கிரஸ் 17, என்சிபி 10… மராட்டியத்தில் I.N.D.I.A. கூட்டணி கட்சிகளுக்கு இடையே தொகுதி பங்கீடு நிறைவு!! appeared first on Dinakaran.

Tags : Lok Sabha Election ,Sivasena ,21 ,Congress 17 ,NCB ,I.N.D.I.A. ,DELHI ,INDIA ,MARATIA ,LLAKAWA ELECTIONS ,18th Parliamentary People's Election of the country ,Maratiya ,Lok Sabha ,Sivasena 21 ,NCB 10 ,Dinakaran ,
× RELATED மக்களவை தேர்தல் பரப்புரையில் ‘டீப்...