×

போலி ஆவணம் கொடுத்து தேர்தல் பணிமனை திறப்பு: பா.ஜ.க. மண்டல தலைவர் வீட்டில் சோதனை

சென்னை: பா.ஜ.க. மண்டல தலைவர் மருதுபாண்டி வீட்டில் போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 19ம் தேதி நடக்கிறது. தமிழ்நாட்டை பொறுத்தவரை திமுக, அதிமுக, பாஜ தலைமையில் தனித்தனி கூட்டணியும், நாம் தமிழர் கட்சி தனியாகவும் இந்த தேர்தலில் களம் இறங்கியுள்ளன. தேர்தல் நெருங்கும் நிலையில் அரசியல் கட்சி தலைவர்கள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே மத்திய சென்னை தொகுதிக்கு உட்பட்ட திருமங்கலத்தில் வீட்டின் உரிமையாளர் பெயரில் போலி ஆவணம் கொடுத்து தேர்தல் பணிமனை திறக்கப்பட்டுள்ளது.

இந்த விவகாரத்தில் பா.ஜ.க. பெண் நிர்வாகி மீனாட்சியை சென்னை திருமங்கலம் போலீசார் கைதுசெய்தனர். அதனை தொடர்ந்து தற்போது வில்லிவாக்கம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வில்லிவாக்கம் பாஜக மண்டல தலைவர் வீட்டில் திருமங்கலம் குற்றப்பிரிவு ஆய்வாளர், வில்லிவாக்கம் காவல்துறையினர் உள்பட ஏராளமான போலீசார் காலை 6 மணி முதல் சோதனை நடத்தி வருகின்றனர். பெண் நிர்வாகி கைதை தொடர்ந்து பா.ஜ.க. மண்டல தலைவர் மருதுபாண்டி வீட்டில் போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

The post போலி ஆவணம் கொடுத்து தேர்தல் பணிமனை திறப்பு: பா.ஜ.க. மண்டல தலைவர் வீட்டில் சோதனை appeared first on Dinakaran.

Tags : BJP ,Zonal Head ,Chennai ,Maruthupandi ,Tamil Nadu ,Tamilnadu ,DMK ,AIADMK ,Naam Tamilar Party ,District ,
× RELATED தேர்தல் பணிமனையில் பாஜவினர் மோதல்: பாஜ...