×

பழங்குடியின மக்களின் பாரம்பரிய சில்லாலன் திருவிழா

கூடலூர் : கூடலூர் அத்திப்பாளியை அடுத்துள்ள காரமூலா பகுதியில் மவுண்ட்டாடன் செட்டி இன மக்களின் பாரம்பரிய விழாவான சில்லாலன் திருவிழா நேற்று நடைபெற்றது.
நேற்று அத்திப்பாளியை அடுத்த காரமூலா பகுதியில் குலை வெட்டு திருவிழா நடைபெற்றது. இதற்காக 15 நாட்களுக்கு முன்னதாக விரதம் இருந்து இங்குள்ள தென்னை மரங்களில் தரமான இளநீர் தேர்வு செய்து அவை தரையில் விழாமல் வெட்டி கயிறு மூலம் கீழே இறக்கப்படும்.

விரதம் கடைப்பிடிக்கும் மூத்த பழங்குடியின மக்கள் அவற்றை வாங்கி அருகிலுள்ள சிறிய அம்மன் கோவிலில் வைத்து, அதனுடன் தென்னம்பாளை, பாக்குப்பாளை ஆகியவற்றையும் கட்டி பூஜைகள் நடத்தி வந்திருக்கும் பக்தர்களுக்கு பிரசாதம் அன்னதானம் வழங்கி பின்னர் அங்கிருந்து பணியர் இன மக்களின் பாரம்பரிய இசை முழங்க ஊர்வலமாக எடுத்துச் சென்று மங்குழி பகவதி அம்மன் கோவிலில் ஒப்படைத்தனர்.

கோவிலில் நடைபெறும் மூன்று நாள் திருவிழாவில் நிறைவு நிகழ்ச்சியான இன்று ஏற்கனவே 15 நாட்களுக்கு முன் கொண்டு செல்லப்பட்டு இருப்பு வைக்கப்பட்ட பழுத்த வாழைக் குலைகள், இளநீர் உள்ளிட்டவை அம்மனின் பூஜைக்கு பயன்படுகிறது.மங்குழி பகவதி அம்மன் கோவில் திருவிழா ஞாயிற்றுக்கிழமை கணபதி ஹோமம், கொடியேற்றத்துடன் தொடங்கி சிறப்பு அலங்கார அபிஷேகங்கள் ஆகியவற்றுடன் நடைபெற்று வருகிறது. நிறைவு நாளான இன்று சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு மாலையில் தேர் ஊர்வலத்துடன் திருவிழா முடிவடையும்.

The post பழங்குடியின மக்களின் பாரம்பரிய சில்லாலன் திருவிழா appeared first on Dinakaran.

Tags : Chillalan festival ,Kudalur ,Mountadan ,Chillalan ,Karamula ,Attipali ,Athippali ,Sillalan festival of tribal people ,Dinakaran ,
× RELATED கொல்லிமலை முதல் காந்திபேட்டை வரை புறவழி சாலை விரிவாக்க பணிகள் தீவிரம்