×

ரம்ஜான் நெருங்கும் நிலையில் கே.வி.குப்பம் ஆட்டு சந்தையில் வியாபாரம் ‘டல்’

கே.வி.குப்பம் : ரம்ஜான் நெருங்கும் நிலையில் கே.வி.குப்பம் ஆட்டு சந்தையில் நேற்று வியாபாரம் குறைந்து காணப்பட்டது. வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் ஆட்டுச்சந்தை சிறப்பு வாய்ந்தது. வாங்குவோர் விரும்புகிற இன ஆடுகள், திரட்சியான உடல் அமைப்புடன் கிடைப்பது மட்டுமன்றி, விற்போருக்கும் கணிசமான லாபம் கிடைக்கும். இதனால்தான், ஆடு வியாபாரிகள் அதிகளவில் இங்குக் கூடுகிறார்கள். கே.வி.குப்பம் சந்தை மேடு பகுதியில் வாரந்தோறும் திங்கட்கிழமை இயங்கி வருகிறது இந்த ஆட்டுச்சந்தை.

கே.வி.குப்பம்‌ சுற்றுப்புற கிராமங்களில் தற்போது மானாவாரி விவசாயம் நடந்து வருகிறது. மழையை மட்டுமே நம்பிய இந்த விவசாயத்தில் போதிய மழை பொய்த்து போனால் விவசாயிகளுக்கு நஷ்டம்தான். அதனால், விவசாயிகள், மானாவாரி விவசாயத்தை மட்டும் நம்பி இருக்காமல் உப தொழிலாக ஆடு, மாடு போன்ற கால்நடை வளர்ப்பிலும் ஈடுபட்டு வருகிறார்கள்.

வெளி மாவட்டங்களிலிருந்து விற்பனைக்காக வரும் ஆடுகளை விட, இதுபோன்ற மானாவாரிப் பகுதிகளில் இருந்து விற்பனைக்காக வரும் ஆடுகளின் எண்ணிக்கைதான் அதிகமாக இருக்கும்.
தீபாவளி, ரம்ஜான், பக்ரீத், கிறிஸ்துமஸ் பொங்கல் பண்டிகை என பல்வேறு விழா காலங்களை முன்னிட்டு இந்தச் சந்தையில் ஆடுகள் விற்பனை கூடுதலாக நடைபெறும்.

இந்நிலையில் தற்போது ரம்ஜான் பண்டிகை ஓரிரு நாட்களில் வர உள்ள நிலையில் அதனை முன்னிட்டு ஆட்டுச் சந்தையில் நேற்று காலை மிகவும் எதிர்பார்ப்புடன் ஆடுகள் விற்பனை நடந்தது. நேற்று காலை வழக்கம்போல சந்தை கூடியது. காட்பாடி, குடியாத்தம், பரதராமி, ஒடுகத்தூர் உள்ளிட்ட சுற்றுப்புற கிராமங்களில் இருந்து ஆடு வளர்ப்பவர்கள், விற்பனைக்காக ஆடுகளை கொண்டு வந்தனர். ஆந்திர மாநிலம் மிகவும் அருகில் இருப்பதால் மக்கள் இங்கு அதிகமாக இருப்பதால் ஆடுகள் விற்பனை நடைபெறும் என்று எதிர்பார்ப்புடன் ஆடுகளை கொண்டுவந்தனர். ஆனால் எதிர்பார்த்த அளவிற்கு ஆடுகள் விற்கவில்லை.

இதுகுறித்து சந்தை ஏலதாரரிடம் கேட்டபோது, 300 ஆடுகள் கொண்டுவரப்பட்டன. சராசரியாக ஆடுகள் ₹10 ஆயிரம் வரை விற்றது. மொத்தமாக ரூ.10 லட்சம் வரை ஆடுகள் வர்த்தகம் நடைபெற்றது என்றார்.

இதுகுறித்து வியாபாரிகள் கூறுகையில், 10 கிலோ எடை கொண்ட ஆடு ரூ.9000 முதல் ரூ.10,500 வரை விலை போனது. சில ஆடுகள் 25 ஆயிரம் வரையும் விலை போனது. ஆடுகளோட எண்ணிக்கை அதிகமா இருந்தாலும் போன வாரத்தை விட இந்த வாரம் மொத்தமாக ஆடு விற்பனை ஆகும் என நம்பி தான் வந்தோம், ஆனால் வியாபாரம் மிகவும் ‘டல்’ லாக நடந்திருக்கு என்றனர்.

The post ரம்ஜான் நெருங்கும் நிலையில் கே.வி.குப்பம் ஆட்டு சந்தையில் வியாபாரம் ‘டல்’ appeared first on Dinakaran.

Tags : Ramzan ,KV Kuppam goat market ,KV Kuppam ,Vellore district ,Dinakaran ,
× RELATED இளம்பெண்ணிடம் செல்போன் பறித்த வாலிபர் கைது கே.வி.குப்பம் அருகே