×

ஹைதராபாத் எக்ஸ்பிரசில் வந்தவரிடம் இருந்து ரூ.30 லட்சம் பறிமுதல்; ரயில்வே போலீசார், தேர்தல் பறக்கும் படையினர் சோதனையில் சிக்கியது..!!

சென்னை: ஹைதராபாத் எக்ஸ்பிரசில் வந்தவரிடம் இருந்து ரூ.30 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. நாடாளுமன்ற தேர்தல் நெருங்குவதையடுத்து சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் மட்டுமின்றி, தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் பணம் பறிமுதல் செய்யப்படுவது தொடர்கதையாகி வருகிறது. இந்நிலையில் ஆந்திர மாநிலம் குண்டூரில் இருந்து ஹைதராபாத் எக்ஸ்பிரஸ் ரயிலில் இன்று காலை சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் வந்த பயணி ஒருவரிடம் சந்தேகத்தின் பேரில் ரயில்வே காவல்துறையினர் நடத்திய விசாரணையில், கஞ்சா பொட்டலங்களைப் போல பணம் கட்டி கொண்டுவரப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து ரயில்வே காவல் நிலையம் அழைத்துவரப்பட்ட ஆந்திர மாநிலம் குண்டூர் பகுதியை சேர்ந்த ஞானவேல் என்பவர், கொண்டுவந்த பணம் குறித்து பறக்கும்படை அதிகாரிகளுக்கு கொடுக்கப்பட்ட தகவலின் அடிப்படையில், அதிகாரிகள் குழுவினர் சென்னை சென்ட்ரல் ரயில்வே காவல் நிலையத்தில் அவர் வைத்திருந்த உடமைகளை சோதனை செய்த போது ரூ.30 லட்சம் கட்டுக் கட்டாக இருப்பது தெரியவந்தது. நகை வாங்க சென்னைக்கு பணம் கொண்டு வந்ததாக ஞானவேல் தகவல் தெரிவித்துள்ளார். இருப்பினும், தேர்தல் நேரம் என்பதால், உரிய ஆவணமின்றி கொண்டு வரப்பட்ட பணம் வருமான வரித்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது. இதுகுறித்து தொடர் விசாரணையும் நடத்தப்பட்டு வருகிறது.

The post ஹைதராபாத் எக்ஸ்பிரசில் வந்தவரிடம் இருந்து ரூ.30 லட்சம் பறிமுதல்; ரயில்வே போலீசார், தேர்தல் பறக்கும் படையினர் சோதனையில் சிக்கியது..!! appeared first on Dinakaran.

Tags : Hyderabad ,Express ,Chennai ,Chennai Central Railway Station ,Tamil Nadu ,AP ,Guntur ,Hyderabad Express ,Railway police ,
× RELATED அரக்கோணம் வழியாக பாண்டிச்சேரி...