×

மோடி தலைமையிலான பாஜ அரசை வீட்டுக்கு அனுப்பிவிட்டு மக்களுக்கு நல்லது செய்யும் இந்தியா கூட்டணி ஆட்சியை ஒன்றியத்தில் உருவாக்க வேண்டும்

*கனிமொழி எம்பி பேச்சு

உடன்குடி : மோடி தலைமையிலான பாஜ அரசை வீட்டுக்கு அனுப்பிவிட்டு மக்களுக்கு நல்லது செய்யும் இந்தியா கூட்டணி ஆட்சியை ஒன்றியத்தில் உருவாக்க வேணடும் என்று உடன்குடி, திருச்செந்தூர் பகுதியில் பிரசாரத்தில் ஈடுபட்ட கனிமொழி எம்பி பேசினார்.தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதியில் இந்தியா கூட்டணி சார்பில் திமுக வேட்பாளராக போட்டியிடும் கனிமொழி எம்பி, தொகுதி முழுவதும் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.

நேற்று முன்தினம் குலசேகரன்பட்டினம் மெயின் பஜார், மணப்பாடு, சிறுநாடார் குடியிருப்பு, மாதவன்
குறிச்சி, தாண்டவன்காடு, ஞானியார் குடியிருப்பு, வேதக்கோட்டை விளை, உதிரமாடன்குடியிருப்பு, கொட்டங்காடு, உடன்குடி மெயின் பஜார், தேரியூர், வேப்பங்காடு, மெஞ்ஞானபுரம், பரமன்குறிச்சி, வெள்ளாளன்விளை, தண்டுபத்து ஆகிய இடங்களில் கனிமொழி எம்பி வாக்கு சேகரித்தார்.

அப்போது அவர் பேசுகையில், மழைவெள்ளத்தின் போது தமிழகத்தை எட்டிப்பார்க்காத பிரதமர் மோடி, தற்போது தமிழகத்தை சுற்றிச் சுற்றி வருகிறார். இந்தியா கூட்டணிதான் ஒன்றியத்தில் ஆட்சி அமைக்கும். தமிழ்நாடு எனப் பெயர்கோரி உயிர்நீத்த சங்கரலிங்கனார் நினைவாக திமுக ஆட்சி அமைத்த பிறகு தமிழ்நாடு என பெயர் சூட்டப்பட்டது. ஆனால் ஆளுநர் ஒருவர் இருக்கிறார், அவர் தமிழ்நாடு என அழைக்கக் கூடாது எனக் கூறுகிறார். ஒன்றிய பாஜ ஆட்சியில் பெட்ரோல், டீசல், காஸ் விலை உயர்வு என மக்களை வாட்டி வதைத்து உள்ளனர். இந்த நிலை மாறிட இந்தியா கூட்டணி ஆட்சி அமைக்க வேண்டும், என்றார்.

முன்னதாக திருச்செந்தூர் அமலிநகர் பங்குதந்தை வில்லியம் சந்தானத்தை சந்தித்து ஆசிபெற்ற கனிமொழி எம்பி, திறந்தவேனில் நின்றபடி வாக்குசேகரித்தார். அப்போது அவர் பேசுகையில் ‘‘சிறுபான்மையின மக்களுக்கு விரோதமாகச் செயல்படும் மோடி தலைமையிலான பாஜ ஆட்சியை வீட்டுக்கு அனுப்பிவிட்டு மக்களுக்கு நல்லது செய்யும் இந்தியா கூட்டணி ஆட்சியை நாம் உருவாக்கி காட்ட வேண்டும். இதற்காக அனைவரும் ஒருங்கிணைந்து இந்த தேர்தலிலே பணியாற்ற வேண்டும். அதற்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து என்னை வெற்றிபெறச் செய்ய வேண்டும். உங்களுக்காக பணியாற்றிட மீண்டும் ஒரு வாய்ப்பு தர வேண்டும்’’ என்றார்.

பிரசாரத்தில் தெற்கு மாவட்ட திமுக செயலாளரும், அமைச்சருமான அனிதா ராதாகிருஷ்ணன், ஊர்வசி அமிர்தராஜ் எம்எல்ஏ, மாநில வர்த்தக அணி துணை செயலாளர் உமரிசங்கர், மகளிரணி பிரசார குழு செயலாளர் ஜெசிபொன்ராணி, திருச்செந்தூர் நகராட்சி தலைவர் சிவஆனந்தி, துணை தலைவர் செங்குழி ரமேஷ், உடன்குடி யூனியன் சேர்மன் பாலசிங், துணை சேர்மன் மீராசிராசுதீன், முரளி, பொதுக்குழு உறுப்பினர் முத்துச்செல்வன், சார்பு அணிகளின் மாவட்ட அமைப்பாளர்கள் ஸ்ரீ தர் ரொட்ரிகோ, ராமஜெயம், ராஜேஷ், இளைஞரணி மாவட்ட முன்னாள் அமைப்பாளர் எஸ்.ஜே.ஜெகன், திருச்செந்தூர் நகர செயலாளர் வாள் சுடலை, துணை செயலாளர் அமலன், அமலி சந்திரன், நகராட்சி கவுன்சிலர்கள் முத்துஜெயந்தி, லீலா, ஆனந்த ராமச்சந்திரன், செந்தில்குமார், ஆறுமுகம், மாவட்ட துணை அமைப்பாளர்கள் கிருபாகரன், இசக்கிமுத்து, அருணகிரி, டேனியல்,

இளைஞரணி சிவா, உடன்குடி கிழக்கு ஒன்றிய செயலாளர் இளங்கோ, மாவட்ட பிரதிநிதி ஜெயப்பிரகாஷ், மதன்ராஜ், குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயில் அறங்காவலர் குழு தலைவர் தாண்டவன்காடு கண்ணன், உடன்குடி பேரூராட்சி துணை தலைவர் சந்தையடியூர் மால்ராஜேஷ், மாவட்ட கலை இலக்கிய அணி மாவட்ட துணை தலைவர் ரஞ்சன், பேரூராட்சி கவுன்சிலர்கள் அஸ்ஸாப், ஜான்பாஸ்கர், செட்டியாபத்து பஞ். தலைவர் பாலமுருகன், ராமசாமி, திலகன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

The post மோடி தலைமையிலான பாஜ அரசை வீட்டுக்கு அனுப்பிவிட்டு மக்களுக்கு நல்லது செய்யும் இந்தியா கூட்டணி ஆட்சியை ஒன்றியத்தில் உருவாக்க வேண்டும் appeared first on Dinakaran.

Tags : India ,Modi ,BJP government ,Kanimozhi ,Ebengudi ,Tiruchendur ,
× RELATED I.N.D.I.A. கூட்டணி மன்னிப்பு கேட்க வேண்டும்: பிரதமர் மோடி