- மோடி
- விடுதலை சிறுத்தைகள்
- ரவிக்குமார்
- விழுப்புரம்
- திருவெண்ணெய் நல்லூர் ஒன்றியம்
- விடுதலை புலிகள் கட்சி
- 18 வது லோக்சபா தேர்தல்
- சபா
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- புதுச்சேரி
- தின மலர்
விழுப்புரம்: திருவெண்ணெய் நல்லூர் ஒன்றியத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் ரவிக்குமார் வாக்கு சேகரித்தார். 18வது மக்களவை தேர்தலில் முதல்கட்ட வாக்குப்பதிவு ஏப்.19ம் தேதி நடைபெறுகிறது. அன்றைய தினம் தமிழ்நாடு, புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள 40 மக்களவை தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. இதையொட்டி, அனைத்து கட்சிகளின் தலைவர்களும் சூறாவளி பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், திருவெண்ணெய் நல்லூர் ஒன்றியத்தில் உட்பட்ட பேரணியூர், வலையாம்பட்டு, மேல மங்களம் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராமங்களில் விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் ரவிக்குமார் பனை சின்னத்திற்கு ஆதரவு திரட்டினார். அப்போது மக்களிடம் பேசிய அவர்; மோடியை விரட்டினால் தான் நமக்கு விடிவுகாலம் பிறக்கும். எனவே, நமக்கு இன்னும் பல்வேறு திட்டங்கள் வருவதற்கு நமக்கான ஆட்சி இருக்க வேண்டும் என்பதற்காக முதலமைச்சர் I.N.D.I.A. கூட்டணியை உருவாக்கியுள்ளார். திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைமையிலான இந்த அணியின் சின்னம் பானை. எனவே பானை சின்னத்திற்கு அனைவரும் வாக்களிப்பீர். என்று அவர் வாக்கு சேகரித்தார்.
The post மோடியை விரட்டினால் தான் நமக்கு விடிவுகாலம்: வி.சி.க.வேட்பாளர் ரவிக்குமார் வாக்குசேகரிப்பு appeared first on Dinakaran.