×

இந்தியா மட்டுமின்றி உலக நாடுகளுக்கு எடுத்துக்காட்டாக திகழ்கிறது திராவிட மாடல் அரசு : சேலத்தில் அமைச்சர் உதயநிதி தேர்தல் பரப்புரை!!

சேலம் : சேலம் திமுக வேட்பாளர் செல்வ கணபதியை ஆதரித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் குரங்குச் சாவடி என்ற இடத்தில் பரப்புரை செய்தார். அப்போது பேசிய அவர், “3 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் செல்வகணபதியை வெற்றி பெற வைக்க வேண்டும். சேலத்தில் தான் திமுக இளைஞரணி மாநில மாநாடு நடைபெற்றது. சேலத்தில் நடைபெற்ற திமுக இளைஞரணி மாநாடு 30 சதவீத வெற்றி தான்.

சேலம் தொகுதியில் திமுக வெற்றி பெற்றால் தான் 100 சதவீத வெற்றி ஆகும். சேலம் பழைய பேருந்து நிலையம் ரூ.98 கோடி மதிப்பில் புனரமைப்பு செய்யப்படும். ரூ.548 கோடி மதிப்பில் சேலத்தில் பாதாள சாக்கடை பணிகள் நடைபெற்று வருகிறது. சேலம் கருப்பூரில் டைடல் பார்க் அமைக்கப்படும். சேலத்தில் ஒருங்கிணைந்த திறன் மேம்பாட்டு மையம் அமைக்கப்படும். தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சுங்கச்சாவடிகள் அகற்றப்படும்.

இந்தியா கூட்டணி அரசு அமைந்ததும் சிலிண்டர் விலை ரூ.500ஆக குறைக்கப்படும். தவழ்ந்து சென்று முதலமைச்சர் பதவிக்கு வந்தவர் எடப்பாடி பழனிசாமி. ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களுக்கும் துரோகம் செய்தவர் பழனிசாமி. தமிழ்நாடு அரசின் திட்டங்களை பிற மாநிலங்கள் பின்பற்றி வருகின்றன. இந்தியா மட்டுமின்றி உலக நாடுகளுக்கு எடுத்துக்காட்டாக திகழ்கிறது திராவிட மாடல் அரசு. சேலம் மாவட்டத்தில் மட்டும் 6 லட்சம் பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படுகிறது.

கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் 1.16 கோடி பெண்கள் பலனடைந்து வருகின்றனர். தேர்தல் வாக்குறுதிகள் எதையும் பிரதமர் மோடி நிறைவேற்றவில்லை. பொதுத்துறை நிறுவனங்களை அதானிக்கு தாரைவார்த்துவிட்டார் பிரதமர் மோடி. மோடியின் பா.ஜ.க. ஆட்சியில் பலனடைந்தவர் அதானி மட்டுமே. பொதுத்துறை நிறுவனங்களை அதானிக்கு தாரைவார்த்துவிட்டார் பிரதமர் மோடி. சேலம் உருக்காலையை தனியாருக்கு தாரைவார்க்க முயற்சி செய்தவர் மோடி,”இவ்வாறு தெரிவித்தார்.

The post இந்தியா மட்டுமின்றி உலக நாடுகளுக்கு எடுத்துக்காட்டாக திகழ்கிறது திராவிட மாடல் அரசு : சேலத்தில் அமைச்சர் உதயநிதி தேர்தல் பரப்புரை!! appeared first on Dinakaran.

Tags : India ,Dravitha Model Government ,Soleil ,Minister Udyanidhi ,SALEM ,SALEM DIMUKA ,SELVA GANAPATHI ,LOBBIED ,MINISTERIAL ,STALIN MONKEY BOOTH ,Salaam ,Minister ,Udyanidhi ,
× RELATED திராவிட மாடல் அரசின் சீரிய...