×

மயிலாடுதுறையில் ஒரு வரமாக பிடிபடாத சிறுத்தை தஞ்சாவூருக்கு இடம்பெயர்ந்ததா?: தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ள வனத்துறை!!

மயிலாடுதுறை: மயிலாடுதுறையில் சுற்றித்திரிந்த சிறுத்தை ஒரு வாரமாக பிடிபடாத நிலையில் தஞ்சாவூருக்கு இடம் பெயர்ந்திருக்கலாம் கூறப்படுகிறது. மயிலாடுதுறை மாவட்டம் நகரப் பகுதியில் உள்ள செம்மங்குளத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை அன்று சிறுத்தை ஒன்று புகுந்தது. அந்த பகுதியில் சுற்றித் திரிந்த தெரு நாய்களை வேட்டையாடும் வகையில் சிறுத்தை ஓடும் சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின.

இதை தொடர்ந்து ஐந்து நாட்களாக அந்த பகுதியில் சிறுத்தையை வனத்துறையினர் தேடி வருகின்றனர். சிறுத்தை நடமாட்டம் காரணமாக வீட்டை விட்டு யாரும் வெளியே வர வேண்டாம் என வனத்துறை சார்பில் எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் காஞ்சிவாய் பகுதியிலிருந்து 2 கி.மீ. உள்ள கிராமத்தில் சிறுத்தை தென்பட்டதாக அப்பகுதி இளைஞர்கள் தெரிவித்தனர். சிறுத்தை கால் தடத்தை கண்டறிவதில் நிபுணர்களான பொம்மன், காலனுடன் இணைந்து தேடுதல் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

மேலும், சிறுத்தையை கண்டறிய கோவை WWF- India நிபுணர் குழு 30 கேமரா ட்ராப்புகளுடன் களமிறங்கி விஞ்ஞானப்பூர்வமாக கண்டறிய களப்பணியாளர்களுடன் கூட்டாக பணிகள் தீவிரமடைந்துள்ளது. இந்நிலையில் ஒரு வரமாக போக்கு காட்டி வரும் சிறுத்தை தஞ்சாவூர் மாவட்டம் நரசிங்கப்பேட்டை பகுதியில் நடமாட்டம் இருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் வனத்துறை தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் தஞ்சாவூர் பொதுமக்கள் இடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

The post மயிலாடுதுறையில் ஒரு வரமாக பிடிபடாத சிறுத்தை தஞ்சாவூருக்கு இடம்பெயர்ந்ததா?: தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ள வனத்துறை!! appeared first on Dinakaran.

Tags : Thanjavur ,Mayiladuthura ,Semmangkulam ,
× RELATED தஞ்சாவூர் கைவினை கலைப்பொருள்...