- மத்திய அமைச்சர்
- ராஜ்நாத் சிங்
- மதுரை மீனாட்சியம்மன் கோயில்
- மதுரை
- ராஜ்நாத் சிங் சுவாமி
- பாதுகாப்பு அமைச்சர்
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- நாமக்கல்
- திருவாரூர்
- ராஜபாளையம்
மதுரை: மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் ஒன்றிய அமைச்சர் ராஜ்நாத் சிங் சுவாமி தரிசனம் செய்தார். தமிழகத்திற்கு 2 நாள் பயணமாக வருகை தந்துள்ள இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், நாமக்கல், திருவாரூர், ராஜபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் தேர்தல் பரப்புரையை முடித்துவிட்டு நேற்று இரவு மதுரையில் தங்கியிருந்தார். இன்று காலை மதுரையில் உலக புகழ்பெற்ற மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் சுவாமி தரிசனம் செய்வதற்காக வந்திருந்தார். இதனால் ராஜ்நாத் சிங் தங்கியிருந்த தனியார் விடுதியில் இருந்து, மீனாட்சியம்மன் கோயில் வரை பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
முன்னதாக கோயிலில் ஒன்றிய அமைச்சர் ராஜ்நாத் சிங்கிற்கு பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது. மீனாட்சியம்மனை சுவாமி தரிசனம் செய்வதற்கு முன்பு அங்குள்ள முக்கூரணி விநாயகரை தரிசனம் செய்தார். பின்னர், மீனாட்சி அம்மனையும், சுவாமியையும் தரிசித்து மகிழ்ந்தார். தொடர்ந்து அங்குள்ள பொற்றாமரைக் குளத்தின் முன்பு ராஜ்நாத் சிங் புகைப்படம் எடுத்துக்கொண்டார். இதையடுத்து மதுரை விமான நிலையத்திற்கு புறப்பட்டு சென்றுள்ளார். ராஜ்நாத் சிங் சாமி தரிசனம் செய்ய வந்ததால் சுமார் 9 மணி முதல் 10 மணி வரை பாதுகாப்பு காரணங்களுக்காக பக்தர்களுக்கு கோயிலுக்குள் அனுமதி வழங்கப்படவில்லை.
The post உலக புகழ்பெற்ற மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் சுவாமி தரிசனம் செய்தார் ஒன்றிய அமைச்சர் ராஜ்நாத் சிங்..!! appeared first on Dinakaran.