×

உகாதி, குடி பட்வா, சைத்ர சுக்லாடி, சேத்தி சந்த் உள்ளிட்ட புனிதமான பண்டிகைகளையொட்டி குடியரசு தலைவர், குடியரசு துணை தலைவர் வாழ்த்து!!

டெல்லி : உகாதி, குடி பட்வா, சைத்ர சுக்லாடி, சேத்தி சந்த், நவ்ரேஹ் மற்றும் சஜிபு சைரோபா ஆகிய புனிதமான பண்டிகைகளையொட்டி குடியரசு தலைவர், குடியரசு துணை தலைவர் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்துத் தெரிவித்துள்ளனர்.

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வாழ்த்து: இந்தப் புனிதமான பண்டிகைகளின் நன்னாளில் நாட்டு மக்கள் அனைவருக்கும் எனது நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.இந்த விழாக்கள் புத்தாண்டையும், வசந்த காலத்தையும் வரவேற்பதற்காக நடத்தப்படுகின்றன. அமைதி, நல்லிணக்கம், சகிப்புத்தன்மை என்ற செய்திகளை பரவலாக்க நாட்டின் பல்வேறு பகுதிகளில் இந்த விழாக்கள் கொண்டாடப்படுகின்றன. இவை நமது வளமான கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தின் அடையாளங்களாகும். இந்த விழாக்களின் போது, இயற்கைக்கு நாம் நன்றி தெரிவிக்கிறோம்.இந்த விழாக்கள் அனைவருக்கும் மகிழ்ச்சியையும், வளத்தையும் கொண்டுவரட்டும். மகத்தான உற்சாகத்தோடு, நமது நாட்டின் வளர்ச்சிக்கு பணியாற்ற ஊக்கம் அளிக்கட்டும்.

குடியரசு துணைத்தலைவர் ஜக்தீப் தன்கர் : உகாதி, குடி பட்வா, சைத்ர சுக்லாடி, சேத்தி சந்த், நவ்ரேஹ் மற்றும் சஜிபு சைரோபா ஆகிய புனிதமான பண்டிகைகளையொட்டி மக்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்இந்தத் திருவிழாக்கள் வெவ்வேறு பெயர்களால் கொண்டாடப்படுகின்றன என்றாலும், அதன் மையப்பொருள் மகிழ்ச்சி என்பதாகும். நமது தேசத்தின் பல்வேறு முனைகளில் பாரம்பரிய புத்தாண்டின் தொடக்கத்தை இவை குறிக்கின்றன. மேலும் நம்பிக்கை, செழிப்பு, புதுப்பித்தல் ஆகியவற்றையும் குறிப்பிடுகின்றன. இந்தப் பண்டிகைகளை நாம் கொண்டாடும்போது, பாரதத்தின் கட்டமைப்பை வரையறை செய்யும் வேற்றுமையில் ஒற்றுமை என்ற உணர்வை நாம் பிரதிபலிப்போம்.இந்தப் புத்தாண்டு அனைவரின் வாழ்விலும் வளம், மகிழ்ச்சி மற்றும் நல்ல ஆரோக்கியத்தைக் கொண்டுவரட்டும்.

The post உகாதி, குடி பட்வா, சைத்ர சுக்லாடி, சேத்தி சந்த் உள்ளிட்ட புனிதமான பண்டிகைகளையொட்டி குடியரசு தலைவர், குடியரசு துணை தலைவர் வாழ்த்து!! appeared first on Dinakaran.

Tags : President ,Vice President ,Ugadi ,Gudi ,Padwa ,Chaitra Sukladi ,Sethi Chand ,Delhi ,Gudi Padwa ,Chaitra ,Sukladi ,Navreh ,Sajibu Sairoba ,Draupadi Murmu ,Chaitra Shukladi ,
× RELATED விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் வெற்றி...